ஆன்லைன் விளையாட்டுகளுக்குச் செய்யப்படும் பேமெண்ட்களுக்கான கட்டணங்கள்:
தற்போது: எந்த ஒரு கட்டணமும் கிடையாது.
புதுப்பிக்கப்பட்டது: திறன் அடிப்படையில் மாதம் 10,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்வதற்கு 1% கட்டணம். இந்தப் பேமெண்ட்களுக்கு உங்களுக்கு எந்தவிதமான ரிவார்டு பாயிண்டுகளும் வழங்கப்படாது.
வாலட் லோடிங் செய்வதற்கான கட்டணங்கள்:
தற்போது: எந்த ஒரு கட்டணமும் இல்லை.
புதுப்பிக்கப்பட்டது: வாலட்டை 10,000 ரூபாய்க்கு மேல் லோடு செய்வதற்கு ஒரு மாதத்திற்கு 1% கட்டணம். உங்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பேடிஎம் அல்லது மொபிகுவிக் போன்ற டிஜிட்டல் வாலட்களை ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கு மேல் லோடு செய்வதற்கு 1% கட்டணம் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள் கிடையாது.
யுட்டிலிட்டி பேமெண்ட் செய்வதற்கான கட்டணம் அதிகரிப்பு:
தற்போது: 50,000 ரூபாய்க்கு மேல் 1% கட்டணம். இதன் உச்சவரம்பு மாதத்திற்கு 3,000 ரூபாய்.
புதுப்பிக்கப்பட்டது: உச்சவரம்பு மாதத்திற்கு 4,999 ரூபாய். யுட்டிலிட்டி பேமெண்ட்களைப் பொறுத்தவரை அதிகபட்ச வரம்பு 3,000 ரூபாயிலிருந்து 4,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் இன்சூரன்ஸ் பேமெண்ட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாடகை சார்ந்த பேமெண்ட்களுக்கான கட்டணம் அதிகரிப்பு:
தற்போது: ஒரு டிரான்சாக்ஷனில் 3,000 ரூபாய்க்குச் செய்யும் பேமெண்ட்களுக்கு 1% கட்டணம்.
புதுப்பிக்கப்பட்டது: இந்த உச்சவரம்பு ஒரு டிரான்சாக்ஷனுக்கு 4,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள்களுக்கான உச்சவரம்பு அதிகரிப்பு:
தற்போது: ஒரு டிரான்சாக்ஷனில் 3,000 ரூபாய் வரை. 15,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்வதற்கு 1% கட்டணம்.
புதுப்பிக்கப்பட்டது: இந்த உச்சவரம்பு ஒரு டிரான்சாக்ஷனுக்கு 4,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த பேமெண்ட்களுக்கான கட்டணம் அதிகரிப்பு:
தற்போது: ஒரு டிரான்சாக்ஷனில் 3,000 ரூபாய் வரையிலான பேமெண்ட்களுக்கு 1% கட்டணம்.
புதுப்பிக்கப்பட்டது: இந்த உச்சவரம்பு 4,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், நேரடியாகக் கல்வி நிறுவனங்களுக்குச் செய்யும் பேமெண்ட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட பேமெண்ட்களுக்கு ரிவார்டு பாயிண்டுகள் பெறுவது சம்பந்தமான மாத வரம்புகள்:
இனி ஒவ்வொரு மாதமும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட பேமெண்ட்களுக்கான ரிவார்டு பாயிண்டுகள் கண்காணிக்கப்படும். முன்னதாக தினமும் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இனி இது மாதவாரியாகக் கண்காணிக்கப்படும். இதன் மூலமாகக் கார்டு ஹோல்டர்கள் தங்களுடைய இன்சூரன்ஸ் பேமெண்ட்களை குழுவாக்கி அதன் மூலமாக ரிவார்டு பாயிண்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
June 06, 2025 8:22 AM IST
புதுப்பிக்கப்பட்ட HDFC வங்கி கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் நிபந்தனைகள்… என்னென்ன தெரியுமா…?

