• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்டம் நிலை என்ன? – அப்டேட் விவரம் | What is the Status of Puducherry Airport Expansion Project? – Update Details

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்டம் நிலை என்ன? – அப்டேட் விவரம் | What is the Status of Puducherry Airport Expansion Project? – Update Details
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்குவதற்கான திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளதாக இயக்குநர் ராஜசேகர ரெட்டி கூறினார். தோராய விலை நிர்ணயத்தை தமிழக அரசு புதுச்சேரிக்கு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலைய வளாகத்தில் அதன் விரிவாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் மற்றும் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்துக்கு புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி தலைமை வகித்தார்.

இக்கூட்டம் தொடர்பாக ராஜசேகர ரெட்டி கூறியது: “புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து 250 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான இடம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துவிட்டது. புதுவை அரசின் கழிவுநீர் சுத்திகரிப்பு மைய வளாக இடமும் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் விமான நிலைய விரிவாக்கத் திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்துக்கான தமிழக அரசின் நிலத்துக்கு விலை நிர்ணயம் தோராயமாக புதுவை அரசுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி மத்திய அரசிடம் நிதி பெற்று விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும். தற்போது தனியார் விமான சேவை நிறுவனம் 19 பேர் செல்லும் விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. விமான சேவை தொடங்கும் நிலையில், பயணிகளுக்கான உணவு உள்ளிட்ட அரங்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று ராஜசேகர ரெட்டி கூறினார்.



Read More

Previous Post

தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே CM போட்டி! காங்கிரஸ் கூட்டணியில் சண்டை!

Next Post

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் | International Criminal Court’s arrest warrant against Netanyahu overwar crimes

Next Post
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் | International Criminal Court’s arrest warrant against Netanyahu overwar crimes

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் | International Criminal Court's arrest warrant against Netanyahu overwar crimes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin