புதிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரைத் தாமே தேர்ந்தெடுக்கப்போவதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
அரச ஊடக அலுவலகத்திற்கு வழங்கிய அறிக்கையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கத் தேவையில்லை என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
நாட்டின் ஊழல், முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான முதன்மை நிறுவனமான புதிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தொடர்ந்து திறம்பட செயல்படுவதை உறுதி செய்ய இந்தப் பதவி மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தற்போதைய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையர் அசாம் பாக்கி, தனது பதவிக்காலத்தை மே 12-ஆம் தேதியுடன் நிறைவு செய்யவுள்ளார். மார்ச் 2020-இல் அவர் முதன்முதலில் நியமிக்கப்பட்டதிலிருந்து, அவரது பணிக்காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது; அதாவது மே 2023, மே 2024 மற்றும் மே 2025 ஆகிய ஆண்டுகளில் தலா ஓராண்டு கால நீட்டிப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன.
பிப்ரவரி மாதம் புளூம்பெர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி, முன்னாள் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் ரபிஸி ரம்லி உள்ளிட்ட பல தரப்பினர், அசாம் பாக்கியின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
-fmt
