• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எப்போது முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன? நோட்டுகளின் அளவு மாறுகிறதா? | India’s Plastic ₹10 and ₹20 Notes: RBI’s Polymer Currency Pilot May Begin From April 2027

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எப்போது முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன? நோட்டுகளின் அளவு மாறுகிறதா? | India’s Plastic ₹10 and ₹20 Notes: RBI’s Polymer Currency Pilot May Begin From April 2027
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எப்போது முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன? நோட்டுகளின் அளவு மாறுகிறதா?

இந்தியாவில் கரன்சி பயன்பாட்டு முறையில் முதன்முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. முதலில் 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கான முன்னோட்ட சோதனை வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தி பின்னர் பெரிய மதிப்புள்ள நோட்டுகளுக்கும் விரிவுபடுத்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எப்போது முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன? நோட்டுகளின் அளவு மாறுகிறதா?

இவை பிளாஸ்டிக் நோட்டுகள் என்பதால் அதன் அளவுகளில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழும் நிலையில், ரூபாய் நோட்டின் அளவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது புழக்கத்தில் உள்ள 10 மற்றும் 20 ரூபாய் காகித நோட்டுகளின் அளவுகளிலேயே புதிய பாலிமர் நோட்டுகளும் அச்சடிக்கப்படும்.

நோட்டுகளின் அளவுகள் மாற்றப்பட்டால், நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்க வங்கிகளுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதை தவிர்க்கவே ரிசர்வ் வங்கி பழைய அளவுகளையே தொடர முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு ஏடிஎம் மாற்றியமைக்கும் செலவுகள் பெருமளவில் மிச்சப்படும்.

காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் 2 முதல் 4 மடங்கு வரை அதிக காலம் உழைக்கும், எளிதில் கிழியாது என்பதாலேயே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் தினசரி பரிவர்த்தனைகளில் மிக அதிக அளவில் கைமாறும் நோட்டுகள் 10 மற்றும் 20 ரூபாய் காகித நோட்டுகள் என்பதால் இவைதான் மிக விரைவாக பழையதாகி சேதமடைகின்றன. எனவே, இந்த சிறிய மதிப்புள்ள நோட்டுகளில் இருந்து சோதனையை தொடங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

முதலில் 100 கோடி 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளும், 100 கோடி 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளும் என மொத்தம் 200 கோடி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு சோதனை செய்யப்படவுள்ளன. இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் பிரத்யேகமான Biaxially Oriented Polypropylene பாலிமர் சப்ஸ்ட்ரேட் மூலம் தயாரிக்கப்படுகின்றன. புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமானாலும், தற்போதைய பழைய காகித நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளை எளிதில் தடுக்கக்கூடிய நவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளில் விலங்குகளின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் எதுவும் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான தரக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வரும் ஏப்ரல் முதல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற ரூபாய் நோட்டுகளும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்ற வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article

English summary

India’s Plastic ₹10 and ₹20 Notes: RBI’s Polymer Currency Pilot May Begin From April 2027

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எப்போது முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன? / India is preparing to introduce polymer, or “plastic,” ₹10 and ₹20 banknotes through a pilot project. The Centre has approved RBI’s proposal for field trials of one billion notes in each denomination.

Story first published: Saturday, October 31, 2026, 16:36 [IST]

Other articles published on Oct 31, 2026

Read More

Previous Post

“முடிந்துவிட்டது நண்பா” – ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவை திருமணம் செய்துகொண்ட பத்திரிகையாளர்

Next Post

4 ஆண்டுகள் ரஷ்ய சிறையிலிருந்த அமெரிக்கர் மீட்பு.. தடைகளை விதிக்காததற்கான காரணத்தை விளக்கிய டிரம்ப்! | World News (உலக செய்திகள்)

Next Post
4 ஆண்டுகள் ரஷ்ய சிறையிலிருந்த அமெரிக்கர் மீட்பு.. தடைகளை விதிக்காததற்கான காரணத்தை விளக்கிய டிரம்ப்! | World News (உலக செய்திகள்)

4 ஆண்டுகள் ரஷ்ய சிறையிலிருந்த அமெரிக்கர் மீட்பு.. தடைகளை விதிக்காததற்கான காரணத்தை விளக்கிய டிரம்ப்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin