Last Updated:
பிரேசிலில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். கருத்துக் கணிப்புகள் யாவும் பொய்யாகி உள்ளன.
பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, தற்போதைய அதிபர் லூலா டா சில்வா நான்காவது முறையாக வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பிரேசில் நாட்டில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் லூலா டா சில்வா மற்றும் போல்சனாரோ இடையே போட்டி நிலவியது. பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வாக்காளர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
Brazil’s left-wing President Lula has celebrated with his family and allies, after being elected for a fourth term. He defeated Flávio Bolsonaro – the son of former president Jair Bolsonaro, who is under house arrest. Read more: https://t.co/KAtqAoHHbL https://t.co/ivaIR72Bqg
— BBC News (World) (@BBCWorld) October 26, 2026
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வலதுசாரி தலைவரும், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளருமான போல்சனாரோ 48 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரேசில் முழுவதும் லூலாவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரி அலையைத் தடுத்து நிறுத்தியுள்ள இந்த வெற்றி, உலக அரசியலில் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.


