• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாரதியார் படைப்புகளை வெளியிட்டார் பிரதமர் மோடி: தமிழ் மொழியின் மிகப் பெரிய பொக்கிஷம் என்று புகழாரம்  | PM releases compendium of complete works of great Tamil poet Subramania Bharati

GenevaTimes by GenevaTimes
December 12, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பாரதியார் படைப்புகளை வெளியிட்டார் பிரதமர் மோடி: தமிழ் மொழியின் மிகப் பெரிய பொக்கிஷம் என்று புகழாரம்  | PM releases compendium of complete works of great Tamil poet Subramania Bharati
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தமிழ் மொழி​யின் பொக்​கிஷமாக பாரதி​யார் நூல்கள் அமைந்​துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்​டி​னார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதி​யாரின் படைப்புகள் அடங்கிய 23 பாகங்களை பிரதமர் வெளி​யிட்​டார்.

மகாகவி சுப்​பிரமணிய பாரதி​யின் 143-வது பிறந்​தநாள் விழா நேற்று நாடு முழு​வ​தி​லும் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி தேசியக் கவி பாரதி​யாரின் முழு​மை​யான படைப்பு நூல்​களின் தொகுப்பை 23 பாகங்களாக பிரதமர் நரேந்திர மோடி டெல்​லி​யில் நேற்று வெளி​யிட்​டார்.

மத்திய கலாச்​சாரத் துறை​யின் கீழ் அமைந்​துள்ள சாகித்ய அகாடமி சார்​பில் பிரதமரின் அரசு இல்லத்​தில் இதற்கான நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்​றது. கால வரிசை​யில் பாரதி படைப்புகள் என்ற பெயரில் தமிழில் வெளி​யிடப்​பட்ட இந்நூல்களை சீனி விசுவ நாதன் தொகுத்​துள்ளார். இந்த நிகழ்ச்​சி​யில் மத்திய கலாச்​சாரத் துறை அமைச்சர் கஜேந்​திரசிங் ஷெகாவாத், நாடாளு​மன்ற விவகாரத்​துறை இணையமைச்சர் எல்.​முருகன் உள்ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

இந்த தொகுப்​பில் சுப்​பிரமணிய பாரதி​யின் எழுத்​து​களின் பதிப்பு​கள், விளக்​கங்​கள், ஆவணங்​கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக் காட்சி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. முதன்​முறையாக பாரதி​யார் படைப்புகள் காலவரிசைப்படி நூல்​களாக வெளி​யிடப்​பட்​டுள்ளன. தமிழகத்​தின் 123 ஆண்டுகள் பழமையான அலையன்ஸ் நிறு​வனம் இதனை வெளி​யிட்​டுள்​ளது.

நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி பேசி​ய​தாவது: மகா கவி சுப்​பிரமணிய பாரதியாரின் பிறந்​தநாளை நாடு இன்று கொண்​டாடு​கிறது. நான் அவரை பயபக்தி​யுடன் வணங்​கு​கிறேன். அவரது மரபுக்கு எனது இதயப்​பூர்​வமான அஞ்சலியை செலுத்து​கிறேன்.

மகாகவி சுப்​ரமணிய பாரதி​யின் படைப்புகள் வெளிவருவது என்பது அவருக்கு குறிப்​பிடத்​தக்க மரியாதையை அளிப்​ப​தாகும். நாட்​டின் தேவைகளை மனதில் கொண்டு பாடு​பட்ட சிறந்த சிந்​தனை​யாளர் சுப்​ரமணிய பாரதி. அவருடைய பார்வை மிகவும் விசால​மானது. அந்த காலகட்​டத்​தில் நாட்டுக்​குத் தேவையான அனைத்து திசைகளி​லும் அவர் பணியாற்றினார்.

மகா கவிஞர் சுப்​பிரமணிய பாரதி​யாரின் படைப்புகளை வெளி​யிடு​வ​தில் நான் பெருமை கொள்​கிறேன். பாரதி​யார் தமிழகத்​தின், தமிழ் மொழி​யின் பாரம்​பரியம் மட்டுமல்ல, அவர் தனது ஒவ்வொரு மூச்​சை​யும் அன்னை பாரதத்​தின் சேவைக்காக அர்ப்​பணித்த சிந்​தனை​யாளர்.

நம் நாட்​டில், வார்த்​தைகள் வெறும் வெளிப்​பாடாக மட்டும் இல்லாமல், ஆழமான முக்​கி​யத்து​வத்​தைக் கொண்​டுள்ளன. வார்த்​தைகளின் எல்லை​யற்ற ஆற்றலைப் பொக்​கிஷ​மாகக் கருதும் கலாச்​சா​ரத்​தைச் சேர்ந்​தவர்கள் நாம். அதனால்​தான் நம் ஞானிகளின் வார்த்​தைகள் அவர்​களின் எண்ணங்கள் மட்டுமல்ல, அவர்​களின் சிந்​தனை, அனுபவம் மற்றும் ஆன்மீக பயிற்​சி​யின் சாறாக அமைந்​துள்ளன.

சுப்​ரமணிய பாரதி போன்ற ஆளுமை நூற்​றாண்​டுக்கு ஒருமுறை கிடைக்​கக்​கூடியது. அவருடைய சிந்​தனை, புத்​திசாலித்​தனம், பல பரிமாண ஆளுமை ஆகியவை நம் அனைவரை​யும் ஆச்சரியப்​படுத்து​கிறது. அவரது எண்ணங்​கள், சிந்​தனைகள் நம் எல்லோரை​யும் ஊக்கு​விக்​கிறது. அவரை நோக்கி ஈர்க்​கின்றன. தமிழ் மொழி​யின் பொக்​கிஷமாக தேசியக் கவிஞர் பாரதியாரின் நூல்கள் அமைந்​துள்ளன. பாரதியாரின் படைப்புகள் இன்றும் கூட நம்மை ஊக்கு​விக்​கின்றன.

காசி என்று அழைக்​கப்​படும் வாராணசிக்​கும், பாரதிக்​கும் அதிக தொடர்​புண்டு. தனது அறிவைப் பெருக்​கிக் கொள்​வதற்காக வாராணசிக்கு பாரதி​யார் வந்தார். பின்னர் காசி​யிலேயே சில காலம் பாரதி தங்கி​யிருந்​தார். காசிக்​குப் பெருமை சேர்த்​தவர் பாரதி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதும் கொண்டாட்டம்: உத்தரபிரதேச மாநிலத்​தி​லுள்ள வாராணசி​யில் காசி தமிழ் சங்கமம் கடந்த 2022-ம் ஆண்டில் முதன்​முறையாக நடந்​தது. அப்போது, பாரதி​யின் பிறந்​தநாளை மத்​திய கல்​வித் துறை அமைச்​சகம் இனி வருடந்​தோறும் ‘தேசிய மொழிகள் ​தினம்’ ஆக ​கொண்​டாடப்​படும் என்று அறி​வித்​தது. இதன் ​காரண​மாக, நாட்​டின் அனைத்து ​மாநிலங்​களி​லும் இந்த ஆண்டு பார​தி​யாரின் பிறந்​தநாள் இரண்​டாவது ​முறையாக கொண்​டாடப்​பட்​டது.



Read More

Previous Post

கனடா – அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்.. யுவராஜ் சிங் பிறந்த நாள் இன்று

Next Post
சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்.. யுவராஜ் சிங் பிறந்த நாள் இன்று

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்.. யுவராஜ் சிங் பிறந்த நாள் இன்று

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin