2011 ஆம் ஆண்டில், யுவராஜின் இடது நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பாஸ்டன் மற்றும் இண்டியானாபோலிஸில் கீமோதெரபி சிகிச்சையை மேற்கொண்டார். மார்ச் 2012 இல், கீமோதெரபியின் மூன்றாவது மற்றும் இறுதி சுழற்சியை முடித்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் இந்தியா திரும்பினார். 2012 உலக டி20 தொடருக்கு அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார். 2012 ஆம் ஆண்டில், யுவராஜுக்கு இந்திய அரசால் இந்தியாவின் இரண்டாவது உயரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

