• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாம்பை ஏவி கணவனை கொன்ற மனைவி.. உடற்கூராய்வு ரிப்போர்டில் ட்விஸ்ட்.. மீரட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பாம்பை ஏவி கணவனை கொன்ற மனைவி.. உடற்கூராய்வு ரிப்போர்டில் ட்விஸ்ட்.. மீரட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 16, 2026 9:40 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கணவனைக் கொன்று விட்டு, பாம்பு கடித்து செத்து விட்டதாக நாடகமாடிய மனைவி, காதலனுடன் கைதான வழக்கில், இருவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் உடற்கூராய்வு அறிக்கை அம்பலப்படுத்திய அதிர்ச்சித் தகவல்கள் என்ன?.

ரவிதா
ரவிதா

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் அக்பர்பூர் சாதத் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் காஷ்யப் என்கிற மிக்கி. இவரது மனைவி ரவிதா. கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி, வீட்டில் படுக்கையில் அமித் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலுக்கு அடியில் உயிருடன் ஒரு பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பாம்பு கடித்ததால்தான் அமித் உயிரிழந்திருக்கலாம் என முதலில் குடும்பத்தினர் சந்தேகித்தனர்.

இந்நிலையில், மனைவி ரவிதாவும், பாம்பு கடித்ததால் தான் தனது கணவர் உயிரிழந்து விட்டார் என கதறி அழுது பெரிதாக நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தார். ஆனால், இது இயற்கையான மரணம் இல்லை என்கிற அதிர்ச்சித் தகவல் உடற்கூராய்வு அறிக்கை மூலம் அம்பலமானது. அமித்தின் கழுத்திலும் மூக்குப் பகுதியிலும் காயங்கள் இருந்தன. உடலில் கீறல் போன்ற தடயங்களும் காணப்பட்டன. மிக முக்கியமாக பாம்பு கடித்ததால் அமித் உயிரிழக்கவில்லை என்பது உடற்கூராய்வில் தெள்ளதெளிவாகத் தெரியவந்திருக்கிறது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு தான் அமித் உயிரிழந்தார் என்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியது. இதையடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, அமித்தின் மனைவி ரவிதாவுக்கும், அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த அமர்தீப்புக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவிதாவும் அமர்தீப்பும் சேர்ந்து அமித்தைக் கொலை செய்துவிட்டு, பாம்பு கடித்ததால் தான் மரணம் ஏற்பட்டதாக நம்ப வைத்து திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதையும் படிங்க: கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்.. போலீஸ் கண்முன் ஊர் மக்கள் செய்த செயலால் பரபரப்பு.. என்ன நடந்தது?

கொலைக்குப் பிறகு அமித்தின் உடலுக்கு அடியில் பாம்பு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகித்தனர். இதனால் அந்தப் பாம்பை பிடித்து பரிசோதித்தபோது அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. பாம்பு பிடிப்பவர்களை வைத்து பரிசோதித்துப் பார்த்தபோது, அதன் விஷப்பை அகற்றப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். இதனால், பாம்பின் கடியால் அமித் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியானது.

மருத்துவ ஆதாரங்கள் மட்டுமின்றி, செல்போன் அழைப்புப் பதிவுகளும் இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாக அமைந்தன. அமித் உயிரிழந்ததைத் தொடர்ந்து நான்கு நாட்களில், ரவிதாவும் அமர்தீப்பும் 70-க்கும் மேற்பட்ட முறை பேசியது தெரியவந்தது. மேலும், இருவரும் பயன்படுத்திய செல்போன் எண்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முறை அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில், ரவிதாவும் அமர்தீப்பும் கொலை மற்றும் சதித் திட்டம் தீட்டிய குற்றங்களில் ஈடுபட்டதை நீதிமன்றம் கடந்த அக்டோபர் 7-ம் தேதி உறுதி செய்தது.

திட்டமிட்டு கொலை செய்ததுடன், அதை மறைக்க முயன்றதும் கடுமையான குற்றம் என அரசுத் தரப்பு வாதிட்டது. அமித்தின் குடும்பத்தினரும் இருவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரினர். இதையடுத்து, அக்டோபர் 16-ம் தேதி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஜெய்வீர் சிங் நாகர் தண்டனை விவரங்களை அறிவித்தார். தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்பு, இருவரிடமும் அவர்களின் தரப்பு கோரிக்கைகள் கேட்கப்பட்டன. அப்போது, தனக்கு மூன்று சிறிய குழந்தைகள் இருப்பதால் அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என ரவிதா கோரியதாகவும், வயதான தனது பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என அமர்தீப் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், வழக்கின் தீவிரத்தையும் குற்றத்தின் தன்மையையும் கருத்தில் கொண்ட நீதிமன்றம், இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அதை மறைக்க உயிருடன் இருந்த பாம்பை உடலுக்கு அடியில் வைத்து, பாம்பு கடித்ததால் மரணம் ஏற்பட்டதுபோல சித்தரிக்க முயன்றதை நீதிமன்றம் தீவிரமாகக் கருத்தில் கொண்டது. கொலையை மறைக்கத் தீட்டிய சதியே இறுதியில் இருவரையும் மரண தண்டனை வரை கொண்டு சென்றள்ளது. இதே மீரட்டில்தான், கணவர் சவுரப் ராஜ்புத்தைக் கொன்று உடலை நீல நிற டிரம்மில் மறைத்த வழக்கில், மனைவி முஸ்கானுக்கும் அவரது காதலன் சாஹிலுக்கும் கடந்த அக்டோபர் 14-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.  தற்போது அமித் காஷ்யப் கொலை வழக்கில் அவரது மனைவி ரவிதா மற்றும் காதலனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு தீர்ப்புகளும், நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More

Previous Post

எக்னெலிகொட வழக்கு: சுரேஷ் சலே நீதிமன்றத்தில் ஆஜர்

Next Post

‘காவி உடையில் கை வைக்காதீர்கள்’: பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கைக்கு சஜித் கண்டனம் – Sri Lanka Tamil News

Next Post
‘காவி உடையில் கை வைக்காதீர்கள்’: பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கைக்கு சஜித் கண்டனம் – Sri Lanka Tamil News

'காவி உடையில் கை வைக்காதீர்கள்': பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கைக்கு சஜித் கண்டனம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin