• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘காவி உடையில் கை வைக்காதீர்கள்’: பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கைக்கு சஜித் கண்டனம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
‘காவி உடையில் கை வைக்காதீர்கள்’: பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கைக்கு சஜித் கண்டனம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
‘காவி உடையில் கை வைக்காதீர்கள்’: பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கைக்கு சஜித் கண்டனம்

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குமார் மீதான பொலிஸாரின் நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், ஜனாதிபதி இதில் நேரடியாகத் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குமார் மீது பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உடனடியாகத் தலையிட்டு, பிக்குமாரின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், கண்டியிலிருந்து கொழும்பு வரை நடைபயணமாக வந்த மகா சங்கத்தினர், ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைதியான முறையில் தமது ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் தம்முடன் கொண்டுவந்த புத்தர் சிலையைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தைப் பொலிஸார் பலவந்தமாக அகற்றியதாகவும், இதனால் அங்கிருந்த பிக்குமார் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தின் போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குமாருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, காவி உடைக்கு உரிய மதிப்பளித்து, மகா சங்கத்தினருடன் ஜனாதிபதி நேரடியாகக் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமாருக்கு இடையூறு அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸாரும் அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

பாம்பை ஏவி கணவனை கொன்ற மனைவி.. உடற்கூராய்வு ரிப்போர்டில் ட்விஸ்ட்.. மீரட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பேர் நீக்கம் – நடிகர் பிரகாஷ் ராஜ்… | Makkal Osai

Next Post
எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பேர் நீக்கம் – நடிகர் பிரகாஷ் ராஜ்… | Makkal Osai

எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பேர் நீக்கம் - நடிகர் பிரகாஷ் ராஜ்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin