Last Updated:
விலை மீனின் சுவை, குழம்பு, வறுவல் என அனைத்து உணவிற்கும் ஏற்றதாக இருக்கும் என்பதால் உணவகங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் விசைப்படகுகளில் ஒரு டன்னுக்கு மேல் விலை மீன்கள் சிக்கின. மீனவர்கள் எதிர்பார்த்த விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு மன்னார் வளைகுடா கடலில் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு இன்று காலை கரைக்கு திரும்பினர். பிடித்து வந்த மீன்களை மீன்பிடி துறைமுகத்தில் இறக்கி வைத்தனர். ஒவ்வொரு படகிலும் வாளை மீன், நகரை மீன், நெத்திலி மீன், கணவாய், நண்டு, செருப்பு கிளாத்தி மீன் போன்ற வகை மீன்கள் சிக்கியிருந்தன. மீனவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒவ்வொரு விசைப்படகிலும் ஒரு டன் கிலோக்கு மேலாக விலை மீனானது கிடைத்துள்ளது.
இவ்வகை மீன்கள் உணவிற்கு சுவை நன்றாக இருக்கும் என்பதால் உள்ளூர் விற்பனை முதல் வெளி மாவட்டங்கள் வரை விற்பனை செய்யப்படும். உரிய விலையான ரூ.230 முதல் ரூ.250 வரை விற்பனை சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டனர். விலை மீனின் சுவை, குழம்பு, வறுவல் என அனைத்து உணவிற்கும் ஏற்றதாக இருக்கும் என்பதால் உணவகங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீனவர்கள் எதிர்பார்த்த விலை கிலோ ரூ.300 வரை செல்லும் என எதிர்பார்த்தோம். ஆனால் புரட்டாசி மாதம் என்பதால் ரூ.250-க்கு சென்றுள்ளது. இதுவும் நல்ல விலைதான் என பாம்பன் மீனவர்கள் கூறினர்.

