Last Updated:
PAN Card | வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்தல், வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயமாகும்.
வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட ஒரு முக்கியமான 10 இலக்க எண் நிரந்தர கணக்கு எண் (PAN) மிக முக்கியமான ஆவணமாகும். வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்தல், வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு இது கட்டாயமாகும். உங்களிடம் பான் கார்டு இல்லை, ஆனால் அவசரமாக பான் கார்டு தேவைப்பட்டால், புதிய யூசர்களுக்கு சில நிமிடங்களில் பான் கார்டை வழங்கும் வசதி உள்ளது.
பான் கார்டை ஆன்லைனில் பெறுவதற்கான எளிய வழிகள் இதோ..
- முதலில், https://www.incometax.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வருமான வரி போர்ட்டலுக்கு செல்லவும்
- இதையடுத்து “Instant e-PAN” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
- இப்போது தோன்றும் முகப்புப் பக்கத்தில், “Get New e-PAN” மற்றும் “Download PAN” என்ற இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும். அதில் “Get New e-PAN” என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். பின்னர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து உறுதி செய்து “Continue” என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் OTP-யை சரிபார்க்கவும். உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ உள்ளிட்டு “Continue” என்பதை கிளிக் செய்யவும்.
- ஆதார் விவரங்களை சரிபார்க்கவும். இப்போது தோன்றும் திரையில் உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆதார் விவரங்களை சரிபார்க்கவும். அனைத்து விவரங்களும் துல்லியமாக இருப்பதைச் சரிபார்க்கவும். பின்பு, “Continue” என்பதைக் கிளிக் செய்யவும்.
Also Read: Gold Loan | அமலுக்கு வரும் புதிய விதிகள்? இவர்களுக்கு இனி தங்க கடன் இல்லை.. காரணம் இதுதான்!
- உங்கள் மின்னஞ்சல் முகவரியை சமர்ப்பிக்கவும் (விரும்பினால்). உங்கள் மின்னஞ்சல் முகவரியை சமர்ப்பிக்குமாறு கேட்கப்படலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதை செய்யலாம்.
- இந்த சரிபார்ப்புக்குப் பிறகு, ஒரு acknowledgment number உருவாக்கப்படும்.
- உங்கள் e-PAN உருவாக்கப்பட்டு உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மின்னஞ்சல் முகவரி கொடுக்காதவர்கள் e-filing போர்ட்டலில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- உங்கள் e-PAN-ஐ டவுன்லோடு செய்ய வருமான வரி e-filing போர்ட்டலில் உள்ள “Instant e-PAN” பகுதிக்கு செல்லவும். “Download PAN” என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் எண்ணையும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-யையும் உள்ளிடவும். பின்னர் உங்கள் e-PAN-ஐ PDF வடிவத்தில் டவுன்லோடு செய்யலாம்.
e-PAN வழக்கமான PAN அட்டையை போன்றதா?
ஆம்… e-PAN வழக்கமான PAN அட்டையை போன்றது. தேவைப்படும் இடங்களில் நீங்கள் அதை பயன்படுத்தலாம். நீங்கள் e-PAN-ஐ பிரிண்ட் அவுட் எடுத்து லேமினேஷன் செய்தும் வைத்து கொள்ளலாம் அல்லது https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html இல் ஆர்டர் செய்யலாம். 3-4 நாட்களுக்குள் பான் கார்டு உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.
March 11, 2025 11:40 AM IST


