• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாத்திரம் கழுவ ரோபோக்களுக்கு கற்றுக் கொடுத்தால் மாதம் ரூ.85,000 சம்பளம்! சீனாவைக் கலக்கும் புதிய ஜாப்! | China’s Robot Trainers Earn Up to Rs.85,000 a Month by washing dishes

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பாத்திரம் கழுவ ரோபோக்களுக்கு கற்றுக் கொடுத்தால் மாதம் ரூ.85,000 சம்பளம்! சீனாவைக் கலக்கும் புதிய ஜாப்! | China’s Robot Trainers Earn Up to Rs.85,000 a Month by washing dishes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாத்திரம் கழுவ ரோபோக்களுக்கு கற்றுக் கொடுத்தால் மாதம் ரூ.85,000 சம்பளம்! சீனாவைக் கலக்கும் புதிய ஜாப்!

உலகம் எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்பதை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. அப்படித்தான் சீனாவில் தற்போது ரோபோட் ட்ரெய்னர் வேலைவாய்ப்புக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரோபோட் ட்ரெய்னர்களுக்கு ஐடி ஊழியர்களைப் போலவே நல்ல வருமானமும் கிடைக்கிறது. அது குறித்த கூடுதல் தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ரோபோ ட்ரைனர்களின் வேலை என்ன?: ரோபோ ட்ரெய்னராக இருக்கும் நபர்கள் தங்களுடைய உடலில் சென்சார்களை மாட்டிக் கொள்கின்றனர். அதன் பிறகு நாள் முழுவதும் துணி மடித்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டு வேலைகளை செய்கின்றனர். இதுதான் இவர்களுடைய முழு நேர வேலை. இதை செய்து நல்ல வருமானமும் பெறுவதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பாத்திரம் கழுவ ரோபோக்களுக்கு கற்றுக் கொடுத்தால் மாதம் ரூ.85,000 சம்பளம்! சீனாவைக் கலக்கும் புதிய ஜாப்!

இதை படிக்கும் நமக்கோ இப்படி ஒரு வேலை இருக்கிறதா என்ற எண்ணமே தோன்றுகிறது. உண்மையிலேயே சில தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு ரோபோக்களை உருவாக்கி அவற்றை சமையலறை மற்றும் தொழிற்சாலை வேலைகளை செய்ய வைக்க முயற்சி செய்து வருகின்றன.

ரோபோக்களுக்கு முறையான பயிற்சி வழங்க “ரோபோட் ட்ரைனர்களின்” டேட்டா பயன்படுத்தப்படுகின்றன. ரோபோட் ட்ரைனர்கள் செய்யும் வேலையை ரோபோக்களுக்கு பயிற்றுவித்து அவற்றை மனிதர்களுக்கு மாற்றாக செயல்பட வைப்பது தான் இதன் நோக்கம். ரோபோ ட்ரைனர் வேலை எளிதாக தோன்றினாலும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் இது மிகவும் கடினமான வேலை என்று அதில் இருப்பவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ரோபோ ட்ரெயினர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?: சமீபத்தில் சோசியல் மீடியா தளங்களில் தலையில் கேமராவை பொருத்திக்கொண்டு தங்கள் வேலையை செய்யும் நபர்களை பார்த்தோம். அதே தான் ரோபோ ட்ரைனர்களும் செய்கின்றனர். இந்த வேலையில் இருக்கும் நபர்கள் முதலில் தங்கள் உடலில் சென்சாரை பொருத்திக் கொள்கின்றனர்.

தலையில் கேமரா மற்றும் பிற மோஷன் கேப்சர் சென்சார்களையும் மாட்டிக் கொள்கின்றனர். அதன் பிறகு கம்ப்யூட்டரில் வரும் மெசேஜுக்கு ஏற்ப அன்றாட வீட்டு வேலைகளை செய்கின்றனர். உதாரணமாக மேஜையை துடைப்பது, சட்டையை மடித்து வைப்பது, ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி வைப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். இவைதான் எதிர்காலத்தில் ரோபோக்களுக்கு டேட்டாவாக மாற்றப்படுகிறது.

ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்யும் ரோபோ ட்ரைனர்கள்: ரோபோ ட்ரைனராக இருப்பது சுலபமாக தோன்றினாலும் இதில் பணி புரியும் நபர்கள் ஒரே நாளில் கிட்டத்தட்ட 200 தடவை ஒரே வேலையை செய்கின்றனர். உதாரணமாக ஒரே பாத்திரத்தை 200 முறைக்கு மேல் கழுவுவது. மேசையை துடைப்பது போன்றவற்றை செய்ய வேண்டியதாக சில ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதோடு ரோபோ ட்ரைனர்களை தொடர்ந்து ஒரு கம்ப்யூட்டர் கண்காணித்துக் கொண்டே இருக்கும். அதில் அவர்களுடைய உற்பத்தி திறன் எப்படி இருக்கிறது என்பதும் கண்காணிக்கப்படும். சீனாவின் சமூக வலைதளங்களில் தற்போது இந்த வேலை வாய்ப்புக்கான விளம்பரங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ரோபோ ட்ரைனர்களுக்கு எவ்வளவு சம்பளம்?: இந்த வேலைக்கு மாதம் 4000 முதல் 6000 யுவான் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.50,000 முதல் ரூ.85,000 வரை சம்பளம் பெறுகின்றனர். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், குறுகிய காலத்திற்கு வேலை தேடுபவர்கள், மாணவர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்த வேலையை செய்ய முன் வருவதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்த வேலைக்கு சீன மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. பலரும் உற்சாகத்தோடு ரோபோ ட்ரைனர் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இப்போது அதில் கிடைக்கும் வருமானத்தை விட உடலுக்கும் மனதுக்கும் சோர்வு ஏற்படுவதாக சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

ரோபோ ட்ரைனர் வேலை குறித்து சீன சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளது. ஒரு சிலர் “மனிதர்கள் ரோபோக்களுக்கு வேலை கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால் ஒருநாள் அதே ரோபோக்கள் தங்களுக்கு வேலை கற்றுக் கொடுத்த மனிதர்களின் வேலையையே பறிக்கப் போகிறது” என்று தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்

Share This Article

Story first published: Saturday, October 17, 2026, 12:29 [IST]

Other articles published on Oct 17, 2026

Read More

Previous Post

ஒப்பந்தம் அல்லது பேரழிவு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை

Next Post

11-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை –  காவல்துறை விசாரணை. – Malaysiakini

Next Post

11-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை –  காவல்துறை விசாரணை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin