Last Updated:
பாராளுமன்ற பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்புத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சனிக்கிழமை இரவு திருப்பதி மலையை வந்தடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை அவர்கள் பிரசித்திபெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் குழு உறுப்பினர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் வேத பண்டிதர்கள் அவர்களுக்கு வேத ஆசி வழங்கி வரவேற்றனர்.
தொடர்ந்து கோவிலுக்கு வெளியே பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், எம்.பி.யுமான விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “பாதுகாப்புத்துறை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவினர் காஷ்மீரில் துவங்கி சென்னை வரை சுற்றுப்பயணம் செய்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தி இருக்கிறோம்.
நிறைவாக இன்று திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டோம். எங்களை சிறப்பான முறையில் வரவேற்ற தேவஸ்தான நிர்வாகம் சாமி கும்பிட ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. இந்த பயணம் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.


