Last Updated:
சூரிய ஒளி இல்லாத இரவிலும், மேகமூட்டமான நாட்களிலும் கூட இந்த சாதனம் தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒரு புதுமையான தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பிரிட்டனின் பாத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் தொடங்கப்பட்ட ’Bactery’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மண்ணில் இயற்கையாகவே வாழும் நுண்ணுயிரிகள் கரிமப் பொருட்களை சிதைக்கும்போது எலக்ட்ரான்களை வெளியிடுகின்றன. ’Bactery’ நிறுவனம் உருவாக்கியுள்ள காளான் வடிவிலான சாதனங்களை மண்ணில் புதைத்து வைப்பதன் மூலம், அங்குள்ள எலக்ட்ரான்களை கவர்ந்து இழுத்து மின்சாரமாக மாற்றுகின்றன.
British startup Bactery says its ‘bacteria-powered battery’ uses soil’s naturally occurring microbes to generate a steady trickle of power pic.twitter.com/rvOZDeOPHx
— Reuters (@Reuters) June 10, 2026
சூரிய ஒளி இல்லாத இரவிலும், மேகமூட்டமான நாட்களிலும் கூட இந்த சாதனம் தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது உருவாக்கப்பட்டுள்ள First Generation சாதனங்கள் 10 AA பேட்டரிகளுக்கு சமமான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


