பாகிஸ்தான் மீதான போருக்கு ஆதரவளிப்பதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தான் முன்நின்று போரிடுவேன் என்று கர்நாடக வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுடன் ஜமீர் அகமது கான் பேசியதாவது, “நாங்கள் இந்தியர்கள். பாகிஸ்தானுக்கு எதிராக போருக்குச் செல்ல வேண்டியிருந்தால், நான் தயாராக இருக்கிறேன். என்னை போருக்கு அனுப்பினால், ஒரு அமைச்சராக நான் முன்வரிசையில்தான் நிற்பேன்.
வேண்டுமென்றால், வெடிபொருள்களைக்கூட அணிந்து கொள்கிறேன். நான் நகைச்சுவைக்காகவோ வெறும் வாய்வார்த்தையாகவோ சொல்லவில்லை.

