Singapore pools: பிட்காயின் முதலீடுகளை சூதாட்டத்திற்கு ஒப்பிட்டு பேசிய எதிர் வேட்பாளரின் கருத்துக்கு மவுண்ட்பேட்டன் SMC-யின் சுயேச்சை வேட்பாளர் திரு. ஜெர்மி டான் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, திரு. ஜெர்மி டானின் சில கொள்கைகள் குறித்து அந்த தொகுதியில் மக்கள் செயல் கட்சி (PAP) சார்பில் போட்டியிடும் திருமதி கோ கேள்வி எழுப்பினார்.
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு
உதாரணமாக, அரசாங்கத்தை பிட்காயினில் முதலீடு செய்ய வைப்பது போன்ற டானின் கொள்கைகள் குறித்து திருமதி கோவின் கேள்விகள் இருந்தது.
“இதைத்தான் நான் சூதாட்டம் என்று அழைக்கிறேன்… PAP சூதாட்டத்தில் நம்பிக்கை கொள்ளாது,” என்று திருமதி கோ பேசியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த மே 1 அன்று ஸ்டேடியம் பவுல்வர்டில் உள்ள ஹோம் ஆஃப் அத்லெடிக்ஸ் விளையாட்டுப் பாதையில் தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திரு. டான், “சூதாட்டம் என்றால் என்ன? முதலாவதாக, ஃபேர்பிரைஸுக்கு அருகில் டோட்டோ கடை உள்ளது” என்றும், அந்தக் கிளையை மூடுமாறு PAP வேட்பாளர் கோ ஸ்ஸே கீக்கு சவால் விடுத்தார்.
“சூதாட்டம் என்பது அதிலுள்ள ஆபத்துகளைப் பற்றி போதுமான அளவு ஆய்வு செய்யாமல், பெரிய நகர்வுகளை மேற்கொள்வதாகும்” என்றும் விளக்கினார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான “புதிய எஸ் பாஸ் (S Pass) அனுமதிகளை நிறுத்த வேண்டும்” – PAR அறிக்கை

