Last Updated:
காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சையத் அடில் ஹுசைன் ஷா, பெண்ணை காப்பாற்ற முயன்று உயிரிழந்தார். அவரது குடும்பம் சோகத்தில் உள்ளது.
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தீவிரவாதியை எதிர்த்து போராடிய குதிரை சவாரி தொழிலாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளுக்கு எதிராக, அன்பின் கருவி கொண்டு எதிர் தாக்குதல் நடத்திய உள்ளூர் மக்கள், நாட்டு மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளனர்.
அப்படி, ஈவு இரக்கமற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சையத் அடில் ஹுசைன் ஷா. குதிரை சவாரி தொழில் செய்து வரும் உள்ளூர்வாசியான இவர், தாக்குதலில் இருந்து பெண் ஒருவரை பாதுகாக்கும் நோக்கில், தீவிரவாதியின் துப்பாக்கியை தைரியமாக பிடுங்க முயன்றுள்ளார். அப்போது, தீவிரவாதிகளின் குண்டுடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் குதிரை சவாரி தொழில் செய்து வந்த சையத், இவர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து பெண் ஒருவரை பாதுகாக்கும் நோக்கில், துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார். அப்போது, தீவிரவாதிகளின் குண்டுடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் சோகம் என்னவென்றால், வயதான பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் கொண்ட அவரது குடும்பம், சையத்தின் வருமானத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வந்துள்ளது. உயிரை துச்சமென துறந்த சையத்தின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்திருந்தாலும், தங்கள் எதிர்காலம் குறித்து சையத்தின் தாய் வேதனை தெரிவித்துள்ளார்.
Jammu,Jammu,Jammu and Kashmir
April 24, 2025 7:32 AM IST
பஹல்காம் தாக்குதல்.. பெண்ணின் உயிரை காப்பாற்றி தன் உயிரை விட்ட குதிரை வீரர் – நிர்கதியான குடும்பம்!


