சென்னை, சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின்கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அனைத்து பேருந்துகளிலும் வெற்றிப் பயணம் என்ற பெயரில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் கடந்த 2-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. மேலும், பள்ளிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் சீர் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 4 லட்சத்து 32 ஆயிரத்து 344 சைக்கிள்கள் வாங்கப்பட உள்ளன. இதில் மாணவர்களுக்கான சைக்கிள் தலா ரூ.7,235 எனவும், மாணவிகளுக்கான சைக்கிள் தலா ரூ.7,426 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்கள் கொள்முதல் செய்யும் பட்சத்தில் மொத்த செலவு ரூ.392 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்காக கூடுதலாக ரூ.115 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணை வழங்கப்பட்ட பிறகு கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



