• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பள்ளி படிப்பை பாதியில் விட்டு ரூ.48,000 கோடி சாம்ராஜ்யத்திற்கு உரிமையாளரான கேரளத்துக்காரர்! யார் அந்த நபர்? | Meet Joy Alukkas: The School Dropout Who Built Rs.48,000 crore Jewellery Empire

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பள்ளி படிப்பை பாதியில் விட்டு ரூ.48,000 கோடி சாம்ராஜ்யத்திற்கு உரிமையாளரான கேரளத்துக்காரர்! யார் அந்த நபர்? | Meet Joy Alukkas: The School Dropout Who Built Rs.48,000 crore Jewellery Empire
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பள்ளி படிப்பை பாதியில் விட்டு ரூ.48,000 கோடி சாம்ராஜ்யத்திற்கு உரிமையாளரான கேரளத்துக்காரர்! யார் அந்த நபர்?

சாதிக்க படிப்பு ஒரு தடை இல்லை என்பதை பலர் நிரூபித்து காட்டியுள்ளனர். அப்படித்தான் கேரளாவை சேர்ந்த ஒருவர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இன்று சுமார் ரூ.48,000 கோடி சொத்துக்கு உரிமையாளராக மாறியிருக்கிறார். சிறு வயதில் அவர் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லை. ஆனால் இன்றோ மிகப்பெரிய நகை பிராண்டின் உரிமையாளராக வலம் வருகிறார். யார் அவர்?

1956-ஆம் ஆண்டில் கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு பெரிய வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் ஜாய் ஆலுக்காஸ். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 15 பேர். அதில் 11-ஆவதாக பிறந்தவர் இவர். ஜாய் பிறந்த அதே வருடமான 1956-ஆம் ஆண்டில் அவருடைய தந்தை ஆலுக்கா ஜோசப் வர்கீஸ் திருச்சூரில் முதன்முறையாக ஒரு நகைக்கடையை தொடங்கினார்.

பள்ளி படிப்பை பாதியில் விட்டு ரூ.48,000 கோடி சாம்ராஜ்யத்திற்கு உரிமையாளரான கேரளத்துக்காரர்! யார் அந்த நபர்?

கடை மட்டுமின்றி ஜவுளி வியாபாரம், குடை தயாரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் என பல தொழில்களில் ஆலுக்காஸ் குடும்பம் ஈடுபட்டு வந்தது. 1980-ஆம் ஆண்டில் திருச்சூரிலிருந்து தங்களுடைய கடையை கோழிகோடுக்கு விரிவுபடுத்தினர். அந்த சமயத்தில் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நகைக்கடைக்கு புதுப்புது வாடிக்கையாளர்கள் கிடைக்கத் தொடங்கினர்.

தங்களுக்கு வந்த வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு மேற்காசியா பகுதியில் வணிகத்தை விரிவுபடுத்த ஆலுக்காஸ் குடும்பம் முடிவு செய்தது. இறுதியில் 1988-ஆம் ஆண்டில் அபுதாபியில் முதல் கடையை திறந்தனர். ஜாய் ஆலுக்காஸ் இன் தந்தை மலையாளி என்பதால் அங்கு அவருக்கு மலையாளி வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினர். இதனால் வியாபாரம் இன்னும் வேகமெடுக்க தொடங்கியது.

தந்தைக்கு உதவிய ஜாய் ஆலுக்காஸ்: பாரம்பரியமாக நகை விற்பனை செய்யும் முறையை மாற்றியமைக்க நினைத்த ஜாய் ஆலுக்காஸ் சாப்ட்வேர் மற்றும் முறையான தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்தார்.

ஊழியர்களுக்கு யூனிபார்ம் மற்றும் அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் என தங்களுடைய பிராண்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டார். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரிக்கவே கடையில் அமர்ந்து வியாபாரம் செய்ததை விட்டு தொழிலை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

ஜாய் ஆலுக்காஸ் பிராண்ட்-இன் தொடக்கம்: 2000-ஆம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் நகை வியாபாரத்தைத் தாமே ஏற்றுக்கொண்டு நடத்த தொடங்கினார். 2005-ஆம் ஆண்டில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கும் வணிகத்தை விரிவாக்கம் செய்தார்.

பொதுவாக ஒரு கடை பிற ஊர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்போது.. பிரான்சைஸ் வழங்குவார்கள். ஆனால் ஜாய் ஆலுக்காஸ் அதை விரும்பவில்லை. பிரான்சைஸ் தருவதற்கு பதிலாக எல்லா கடைகளையும் நேரடியாக நடத்த முடிவு செய்தார். இன்று இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. அமெரிக்கா, லண்டன், சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளில் மட்டும் சுமார் 60 கடைகளை நடத்தி வருகிறார்.

2025 -ஆம் ஆண்டில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1290.77 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் ஜா ய் ஆலுக்காஸ்-இன் நிகர மதிப்பு 5 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ.47,672 கொடியாகும்.

Share This Article

Story first published: Thursday, August 13, 2026, 19:59 [IST]

Other articles published on Aug 13, 2026

Read More

Previous Post

சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பில்லை.. துருவ் ஜுரெலை களமிறக்கும் கம்பீர்.. சுப்மன் கில் முடிவும் அதுதான்! | Sarfaraz Khan going to be benched for Dhruv Jurel in the Indian team for the 1st Test against Srilanka

Next Post

கேஎல்ஐஏ சுங்கத்துறை 4 கடத்தல் சம்பவங்களை முறியடித்தது; ரிம 6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சிகரெட்டுகள், கஞ்சா பறிமுதல் – Malaysiakini

Next Post

கேஎல்ஐஏ சுங்கத்துறை 4 கடத்தல் சம்பவங்களை முறியடித்தது; ரிம 6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சிகரெட்டுகள், கஞ்சா பறிமுதல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin