ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா…என பாடிய மகாகவி பாரதி வாழ்ந்த புதுச்சேரியில் சத்தமின்றி மகளிர் சாதனை படைத்து வருகின்றனர். அதுவும்பளூ தூக்கும் போட்டியில்.. இந்த விளையாட்டு என்பது ஆண்களுக்கானது என்று கருதப்பட்ட நிலையில், அமெரிக்காவில் 2017ல் நடந்தஉலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில்இந்தியாவின் மணிப்பூர் மீராபாய் சானு தங்கம் வென்று மற்ற சாதனைகளை முறியடித்தார். அவரை பின்பற்றி புதுச்சேரியில் பளுதூக்கும் பயிற்சி களத்தில் மகளிர் பலரும் இறங்கியுள்ளனர்.
புதுச்சேரி அரசு நடத்தும் உப்பளம் உள் விளையாட்டரங்கில் 1985ம்ஆண்டு முதல் நடத்தும்வலு மற்றும் பளு தூக்கும் பயிற்சி மையத்தில் ஆண்களுக்கு நிகராக மகளிர்எடையை தூக்கி அசத்தி வருகின்றனர். இவர்கள் உள்ளூர்முதல் தேசியபோட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசின்பயிற்சியாளர் இதுகுறித்து கூறும்போது, பளூ தூக்கும் வீராங்கனைகளுக்கு புதுச்சேரி அரசின் ரொக்க பரிசு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதால்காவல் துறை பணியில் சேர தன்னம்பிக்கையுடன் தயாராகி வருகின்றனர் சில மகளிர்..
தொடர்ந்து வீராங்கனை லாவண்யா நம்மிடம் கூறுகையில், இங்கு பயிற்சி பெறும் மாணவி அவந்திக்கா 2028 ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குடும்ப சூழல், நேரம், காலம், வறுமை என பல தடைகள் இருந்தாலும் அவற்றை படிகற்களாய் மாற்றி முன்னேறி வரும் புதுச்சேரியின் சிங்கப்பெண்களுக்கு நிச்சயம் வெற்றியும் வாழ்த்துக்களும் காத்திருக்கின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)