• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பல சொகுசு வசதிகள் இருந்தாலும் ஆடம்பரத்தை விரும்பாத போப் பிரான்சிஸ்… எளிய வாழ்க்கையிலிருந்து கத்தோலிக்க திருத்தந்தை வரை

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பல சொகுசு வசதிகள் இருந்தாலும் ஆடம்பரத்தை விரும்பாத போப் பிரான்சிஸ்… எளிய வாழ்க்கையிலிருந்து கத்தோலிக்க திருத்தந்தை வரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 03, 2025 7:25 AM IST

போப் பிரான்சிஸ், அர்ஜென்டினாவில் பிறந்தவர். 2013ல் 266ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எளிமையான வாழ்க்கை, சமூகநீதி, எச்.ஐ.வி நோயாளிகள், அகதிகளுக்கு ஆதரவு.

போப் பிரான்சிஸ்போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ்

இத்தாலியில் இருந்து அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு இடம் பெயர்ந்த தம்பதியின் 5 குழந்தைகளில் ஒருவராக 1936 ஆம் ஆண்டு பிறந்தவர். ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு, pleurisy என்ற அழற்சியால் 20 வயதிலேயே நுரையீரலின் ஒருபகுதி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் தனது கல்வியை தொடர்ந்த ஹோர்கே, வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

உடல் நலப் பாதிப்பு தந்த வெற்றிடமும் இயேசு கிறிஸ்து மீதான ஈர்ப்பும், இயேசு சபையில் 1958 ஆம் ஆண்டு அவரை இணைய வைத்தது. யூனஸ் அயர்ஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி , எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். பேராயர் என்ற முறையில் அவருக்குப் பெரியதொரு மாளிகை இல்லமாக இருந்த போதிலும் அவர் ஒரு எளிய, சிறிய கட்டடத்தில் வாழ்ந்து வந்தார்.

தனி ஓட்டுநரைக் கொண்ட சொகுசு கார் தமக்கு அளிக்கப்பட்டபோதும் அது வேண்டாம் என கூறி பொது போக்குவரத்திலேயே பயணம் செய்தார். சமையலுக்கென்று தனி ஆள் வைக்காமல், அவர் தமக்கு வேண்டிய உணவைத் தாமே சமைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி பொது வாழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஹோர்கே, 2013 ஆம் ஆண்டு 16ஆது போப் பெனடிக்ட் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருத்தந்தை அசிசியின் பிரான்சிசுவின் நினைவாக பிரான்சிஸ் என்பதை தனது ஆட்சி பெயராகவும் தெரிவு செய்தார். தென் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் ஆவார். இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார்.

மூன்றாம் கிரகோரிக்கு பின்பு ஆயிரத்து 200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம், இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர்.

அனைவரும் சமம் என்ற சமூகநீதி கொள்கைகளை கொண்ட போப் பிரான்சிஸ், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாதிப்புகளால் ஒதுக்கி தள்ளப்பட்ட நோயாளிகள் மீது பரிவு காட்டி வந்தார். 2001இல் எய்ட்ஸ் நோயாளி ஒருவரின் இல்லம் சென்று, அங்கு அவரது கால்களை கழுவி முத்தமிட்டு, அவர்கள் மீதான தனது பரிவை வெளிப்படுத்தினார். அகதிகளுக்கும் புலம்பெயர்வோருக்கும் எப்போதும் தனது ஆதரவை வழங்கி வந்தார் போப் பிரான்சிஸ்.

போரில்லாத அமைதியான உலகிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த போப் பிரான்சிஸ், உலகில் அடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அதேசமயம், பெண்களின் சில குறிப்பிட்ட உரிமைகள் தொடர்பான பிரச்னையில் அடிப்படைவாத கொள்கை கொண்டவராக போப் பிரான்சிஸ் விமர்சிக்கப்பட்டார்

திருமண முறிவு, கருக்கலைப்பு, கருத்தடைக்கான உரிமை உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். கருணைக் கொலை செய்வதைக் கடுமையாக எதிர்த்த போப் பிரான்சிஸ், திருநங்கை, திருநம்பி, ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளடக்கிய எல்ஜிபிஇடி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அதே சமயம், அவர்களை கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

First Published :

March 03, 2025 7:25 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

பல சொகுசு வசதிகள் இருந்தாலும் ஆடம்பரத்தை விரும்பாத போப் பிரான்சிஸ்… எளிய வாழ்க்கையிலிருந்து கத்தோலிக்க திருத்தந்தை வரை

Read More

Previous Post

கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய பங்குச் சந்தை.. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு!

Next Post

1MDB தொடர்பாக முன்னாள் BNM ஆளுநரை குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை; அமைச்சர் | Makkal Osai

Next Post
1MDB தொடர்பாக முன்னாள் BNM ஆளுநரை குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை; அமைச்சர் | Makkal Osai

1MDB தொடர்பாக முன்னாள் BNM ஆளுநரை குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை; அமைச்சர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin