அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே நாளில் மாணவர் சேர்க்கை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையில் ஏற்படும் குழப்பங்களைத் இது தவிர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கான பதிவை ஒரே நேரத்தில் மேற்கொள்வதிலும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
உயர் கல்வி பதிவில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதே நோக்கம்
உயர் கல்வி நிறுவனங்களுக்கான பதிவின் போது எழும் சிக்கல்களைத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.
தற்போதைய சூழ்நிலையில், சில மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, சில சமயங்களில் பல்வேறு காரணங்களால் இரண்டு நிறுவனங்களையுமே இழக்கின்றனர் என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்வி மற்றும் உயர் கல்விக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடியது. அங்கும் இந்தப் பிரச்சினைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது என மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

