• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பரந்தாமன் வென்றால் 3 மாதங்களில் தவெக ஆட்சியை கவிழ்ப்பார்.. ஆர்.எஸ். பாரதி பகீர் | If Pranthaman wins in Madurantakam TVK Government will fall said RS Bharathi

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பரந்தாமன் வென்றால் 3 மாதங்களில் தவெக ஆட்சியை கவிழ்ப்பார்.. ஆர்.எஸ். பாரதி பகீர் | If Pranthaman wins in Madurantakam TVK Government will fall said RS Bharathi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Pavithra Mani

Time
Updated: Friday, September 11, 2026, 9:32 [IST]

செங்கல்பட்டு: திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக மூன்று கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இந்நிலையில் மதுராந்தகத்தில் பரந்தாமன் வெற்றி பெற்றால் 3 மாதங்களில் தவெக ஆட்சியை கவிழ்ப்பார் என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

மதுராந்தகத்தில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலேய தலைசிறந்த முதலமைச்சர் என்று சொல்லுமளவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வளர்ந்தார். அந்த தலைவரையே கொச்சைப்படுத்தியுள்ளனர். 21 நாட்கள் ஒவ்வொரு கட்சிக்காரன் மனதிலும் கலைஞர், தளபதியை பற்றி இழிவுபடுத்தி பேசியவர்களை நினைத்து பணியாற்ற வேண்டும். வேறு எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம்.

RS Bharathi TVK

தவெக ஆட்சி கவிழும்

அப்படி பணியாற்றினால் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன் மிகப்பெரிய வெற்றி பெறுவார். வேறு யாரும் கோச்சுக்காதீங்க. சட்டசபையில் இப்படி ஒரு ஆள் தேவை. எந்த பணி செய்தாலும் சிறப்பாக செய்வார். எந்த கருத்தையும் சரியாக பேசுவார். எழும்பூர் எம்எல்ஏவாக இருந்தபோது அற்புதமாக செயல்பட்டார். இவர் சட்டசபைக்கு செல்வாரே ஆனால் 3 மாதங்களில் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான எல்லா வேலையும் செய்வார். நான் அதை உறுதியாக சொல்கிறேன்.

மதுராந்தகத்தில் நாம் வென்றால் ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழும். அது நம் தொண்டர்கள், கூட்டணி கட்சி தோழர்கள் கையில் உள்ளது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் வாய்ப்பு நம் கையில் உள்ளது. தமிழ்நாடு மாற வேண்டும் என்றால் இந்த 21 நாட்கள் வேலை செய்ய வேண்டும். 15 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்வதில் தொடங்கி, பிரச்சாரம் முடியும் வரை தீயாக பணியாற்ற வேண்டும். இந்த 3 வாரம் அர்ப்பணிப்புடன் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்.

21 நாட்கள் தீயாக

சபரிமலைக்கு மாலை போட்டால் 48 நாட்கள் எப்படி இருப்போமோ, மேல் மருவத்தூர் போவதற்கு எப்படி இருப்போமே அப்படி இந்த 3 வாரம் இருக்க வேண்டும். இந்த 21 நாட்கள் ஒவ்வொரு தொண்டனும், திமுகவின் வரலாற்றை, தமிழகத்தின் எதிர்காலத்தை நிரூபிக்க வேண்டும். வைராக்கியத்துடன் பணியாற்றினால் பரந்தாமன் 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்”என்றார். அவரின் பேச்சு அரசியலில் மீண்டும் புகைச்சலை கிளப்பியுள்ளது.

English summary

DMK RS Bharathi said, If Paranthaman win in Madurantakam TVK Government will fall before January.

Read More

Previous Post

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

Next Post

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம் – Sri Lanka Tamil News

Next Post
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம் – Sri Lanka Tamil News

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin