ரயில்களில் 60 நாட்களாக குறைக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவுக்கான அவகாசம் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள், ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு பயணம் செய்வோர், 120 நாட்கள் முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறை ஏற்கனவே அமலில் இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனை ஏற்று, முன்பதிவுக்கான அவகாசத்தை 60 நாட்களாக ரயில்வே குறைத்துள்ளது. இன்று அமலுக்கு வந்துள்ள புதிய முறையின்படி, ரயில் புறப்படுவதற்கு 60 நாட்கள் முன்பிருந்து மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். எனினும், ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, மோசடி குறுஞ்செய்திகளை தடுப்பதற்கான புதிய நடைமுறையும் இன்று அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, விளம்பரத்துக்காக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் ஆதாரங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கண்காணிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உரிய விதிகளைப் பின்பற்றாமல் இருந்தால், இந்த குறுஞ்செய்திகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
