• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பதிலுக்கு பதில்.. அமெரிக்காவை வைச்சு செய்யும் கனடா.. இரவோடு இரவாக வந்த வரி! | Trade War Retaliation: Canada Hits US with Up to 50% Counter-Tariffs as Trump Threatens Bombardier Jet Ban

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பதிலுக்கு பதில்.. அமெரிக்காவை வைச்சு செய்யும் கனடா.. இரவோடு இரவாக வந்த வரி! | Trade War Retaliation: Canada Hits US with Up to 50% Counter-Tariffs as Trump Threatens Bombardier Jet Ban
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பதிலுக்கு பதில்.. அமெரிக்காவை வைச்சு செய்யும் கனடா.. இரவோடு இரவாக வந்த வரி!

சீனா – அமெரிக்கா மத்தியிலான வர்த்தக போரை தொடர்ந்து தற்போது கனாடா – அமெரிக்கா மத்தியலான போர் மிகப்பெரியதாக வெடித்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடான கனடா உடன் இருக்கும் வர்த்தக உபரியை சமாளிக்க டிரம்ப் கனடாவில் இருந்து வரும் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிக்க உத்தரவிட்டார் டிரம்ப்.

இதை தொடர்ந்து அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடா அமெரிக்கப் பொருட்கள் மீது புதிய 15%, 25%, 50% இறக்குமதி வரிகளை பதிலுக்கு பதில் என்ற வகையில் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமல்படுத்தியுள்ளது.

 பதிலுக்கு பதில்.. அமெரிக்காவை வைச்சு செய்யும் கனடா.. இரவோடு இரவாக வந்த வரி!

செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை முதல் இந்த வரிகள் அமலுக்கு வந்துள்ளதால் இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தக போர் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு, அமெரிக்காவுடன் வர்த்தக உபரி கொண்டு இருக்கும் நாடுகள் மீது டிரம்ப் வரிகளை விதிக்க துவங்கினார்.

அப்போது அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் கனடா செய்ய முடிவு செய்தது, இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி தோல்வி அடைந்த நிலையில் அமெரிக்கா கனடாவின் சில பொருட்களுக்கு 50% வரி விதித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க பொருட்ககளுக்கு 50 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு சீனா அமெரிக்காவுக்கு இணையாக வரி விதித்து டிரம்ப்-ஐ பின்வாங்க செய்த நிலையில் இதே பார்முலாவை தற்போது கனடா கையில் எடுத்துள்ளது. அமெரிக்கா கனடாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி.

கனடாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 68% பங்கு அமெரிக்காவுக்கு மட்டுமே செல்கிறது, இதனால் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி கடுமையான வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காகவே பதிலடி கொடுத்துள்ளது.

உண்மையில் அமெரிக்காவும் இதிலிருந்து முழுமையாக தப்ப முடியாது. இரு நாடுகளின் Supply Chain பல துறைகளில் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்துள்ளன.

குறிப்பாக அமெரிக்காவின் வாகன உற்பத்தி, காப்பர், அலுமினியம் போன்ற உலோகம், எனர்ஜி மற்றும் பிற தொழில்துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் உள்ளது.

கனடா புதிய வரிகளை அமலாக்கம் செய்வதற்கு ஒரு நாள் முன்பே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவின் விமான தயாரிப்பு நிறுவனமான Bombardier மீதும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்க சந்தையில் தனது விமானங்களை விற்பனை செய்ய வேண்டுமெனில், அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்; இல்லையெனில் விற்பனைக்கு அனுமதி இருக்காது என தெரிவித்தார்.

Share This Article

English summary

Trade War Retaliation: Canada Hits US with Up to 50% Counter-Tariffs as Trump Threatens Bombardier Jet Ban

Trade War Retaliation: Canada Hits US with Up to 50% Counter-Tariffs as Trump Threatens Bombardier Jet Ban — பதிலுக்கு பதில்.. அமெரிக்காவை வைச்சு செய்யும் கனடா.. இரவோடு இரவாக வந்த வரி!

Story first published: Tuesday, September 8, 2026, 16:29 [IST]

Other articles published on Sep 8, 2026

Read More

Previous Post

IPL 2027: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் மாற்றம்? முன்னாள் வீரர் வலியுறுத்தல்

Next Post

நிதி நிர்வாகம் மற்றும் அரசாங்கச் செயல்பாடுகள்: மாமன்னரின் கவனத்திற்குச் சென்ற 2025-இன் தணிக்கை அறிக்கை! | Makkal Osai

Next Post
நிதி நிர்வாகம் மற்றும் அரசாங்கச் செயல்பாடுகள்: மாமன்னரின் கவனத்திற்குச் சென்ற 2025-இன் தணிக்கை அறிக்கை! | Makkal Osai

நிதி நிர்வாகம் மற்றும் அரசாங்கச் செயல்பாடுகள்: மாமன்னரின் கவனத்திற்குச் சென்ற 2025-இன் தணிக்கை அறிக்கை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin