இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று (08) அறிவித்துள்ளார்.
இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) பிரிவின் படி உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எனவே, இதனை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை வாக்குகள் அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சபாநாயகரின் உத்தரவு
எனினும், உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளவாறு அந்தப் பிரிவுகள் நீக்கப்பட்டால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, உயர்நீதிமன்றத்தின் முழுமையான தீர்மானத்தை இன்றைய நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அறிக்கையில் (ஹன்சார்ட்) அச்சிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உயரிய தரநிலைகளை அறிமுகப்படுத்துவதையும் அதனைப் பேணி வருவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

