• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கத்தார் நாட்டிற்கு வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ்-ல் LNG கப்பல் போக்குவரத்து துவங்கியது..!! | Qatar Resumes LNG Exports Through Strait of Hormuz: Tanker ‘Al Marrouna’ Departs for Pakistan

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கத்தார் நாட்டிற்கு வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ்-ல் LNG கப்பல் போக்குவரத்து துவங்கியது..!! | Qatar Resumes LNG Exports Through Strait of Hormuz: Tanker ‘Al Marrouna’ Departs for Pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கத்தார் நாட்டிற்கு வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ்-ல் LNG கப்பல் போக்குவரத்து துவங்கியது..!!

உலகிலேயே மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக இருக்கும் கத்தார், நேற்று உலகின் பல பகுதிகளில் காலியாக நிற்கும் தனது 6 எரிவாயு கப்பல்களை ஹார்முஸ் வழியாக அந்நாட்டின் துறைமுகத்திற்கு வரவழைத்தது. கத்தாரின் இந்த செயல்பாடு வளைகுடா நாடுகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

அமெரிக்கா – ஈரான் போர் முழுமையாக முடியாத நிலையிலும், ஈரான் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் வேளையிலும் கத்தார் மீண்டும் தனது எரிவாயு ஏற்றுமதியை துவங்கியுள்ளது. ஜூலை மாதம் கத்தார் நாட்டிற்கு சொந்தமான கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பின்பு மொத்தமாக ஏற்றுமதியை முடக்கியிருந்தது.

கத்தார் நாட்டிற்கு வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ்-ல் LNG கப்பல் போக்குவரத்து துவங்கியது..!!

இந்த நிலையில் கடந்த மாதம் Al Marrouna என பெயர் கொண்ட எல்என்ஜி கப்பலில் லோடு செய்யப்பட்ட எரிவாயுவை செவ்வாய்க்கிழமை காலையில் ஓமான் நாட்டின் வழித்தடம் வாயிலாக ஹார்முஸ் வழித்தடத்தை கடந்துள்ளது.

குவாசிம் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய இந்த கப்பல் பாகிஸ்தானுக்கு இலக்காக கொண்டு வெளியேறியுள்ளது, இந்த கப்பல் வியாழக்கிழமை பாகிஸ்தான் துறைுமுகத்தை சேரும் என தெரிய வந்துள்ளது. ஜூலை தாக்குதலுக்கு பின்பு முதல் முறையாக கத்தார் தனது எரிவாயுவை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகில் 5ல் ஒரு பகுதி எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கும் கத்தார், ஈரான் போர் காரணமாக தனது சப்ளையை மொத்தமாக நிறுத்தியிருக்கிறது. இதனால் ஐரோப்பா முதல் இந்தியா, ஆசிய நாடுகள் வரையில் பெரிய அளவிலான எரிவாயு தட்டுப்பாட்டை உருவாக்கியது, இதன் விளைவு விலை ஏற்றம்.

ஈரான் – அமெரிக்கா மத்தியிலான போர் 7 மாதங்களாக தொடரும் நிலையில், போர் நிறுத்தம், அமைதி பேச்சுவார்த்தைகளில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் நிற்கிறது.

இந்த நிலையில் ஈரான் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ஹார்முஸ் வழித்தடத்தில் கப்பல்களை இயக்க வேண்டுமாயின் ஓமான் உடன் டீல் செய்ய வேண்டியது கட்டாயம், வேறு வழியில்லை என தெரிவித்தது.

ஆனால் இதை வர்த்தகர்கள் ஏற்கவில்லை, ஓமான் உடன் அனுமதி பெற்று கப்பல்களை இயக்கினால் ஈரானுக்கு இவ்வழித்தடத்தில் மிகப்பெரிய கட்டுப்பாட்டை கொடுக்க வேண்டியிருக்கும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா இந்த பிரச்சனையை எப்படி தலையிட்டு சரி செய்யப்போகிறது என்ற கேள்வியும் வர்த்தகர்கள் எழுப்பியுள்ளனர்.

கடந்த 2-3 மாதங்களாக ஈரான் – ஓமான் இணைந்து ஹார்முஸ் வழித்தடத்தை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது முதல் கப்பல்கள் எந்த வழியில் செல்ல வேண்டும், எந்த வழியில் வெளியேற வேண்டும் என்பது வரையில் முடிவுகளை எடுத்துள்ளது.

இதேபோல் ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தை கடுமையான விதிமுறைகள் கொண்டு கட்டுப்படுத்த பெர்சியல் வளைகுடாவில் தடை செய்யப்பட்ட பகுதியை அறிக்கவும் உள்ளது. இது அனைத்தும் ஈரானின் ஆதிக்கம் ஹார்முஸ் வழித்தடத்தில் உயர்த்துவதற்கான படிகளாகவே உள்ளது. இதற்கிடையில் தான் கத்தார் ஓமான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி தனது கப்பலை முதல் முறையாக ஜூலை மாதத்தில் இருந்து வெளியேற்றியுள்ளது.

Share This Article

English summary

Qatar Resumes LNG Exports Through Strait of Hormuz: Tanker ‘Al Marrouna’ Departs for Pakistan

Qatar Resumes LNG Exports Through Strait of Hormuz: Tanker ‘Al Marrouna’ Departs for Pakistan — கத்தார் நாட்டிற்கு வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ்-ல் LNG கப்பல் போக்குவரத்து துவங்கியது..!!

Story first published: Tuesday, September 8, 2026, 12:28 [IST]

Other articles published on Sep 8, 2026

Read More

Previous Post

பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்மானம் அறிவிப்பு

Next Post

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான சேவை பாதிப்பு … | Makkal Osai

Next Post
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான சேவை பாதிப்பு … | Makkal Osai

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான சேவை பாதிப்பு ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin