இதையடுத்து அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். வெற்றி பெற்ற சில நாட்களில், எம்.எல்.ஏ. பல்லவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, தனது மகனுக்கு ‘TVK’ என்று பெயர் வைக்க உள்ளதாக பல்லவி எம்.எல்.ஏ. தெரிவித்தார். மேலும், கட்சி தொடர்பான முக்கிய கூட்டங்களுக்கு தனது குழந்தையுடன் பல்லவி வருகை தந்தார். இந்த நிலையில், த.வெ.க. தலைமையிலான தமிழக அரசு அமைந்த பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி தனது கைக்குழந்தையுடன் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
