• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நெதன்யாகுவை காலி செய்ய.. யூத-அரபு கூட்டணி அமையணும்! இஸ்ரேலில் மக்கள் போர்க்கொடி! | Israelis Demand Opposition-Arab Alliance to Oust Netanyahu as Election Deadlock Deepens

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நெதன்யாகுவை காலி செய்ய.. யூத-அரபு கூட்டணி அமையணும்! இஸ்ரேலில் மக்கள் போர்க்கொடி! | Israelis Demand Opposition-Arab Alliance to Oust Netanyahu as Election Deadlock Deepens
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Published: Sunday, November 1, 2026, 11:42 [IST]

டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்க, எதிர்க்கட்சிகள்.. அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

டெல் அவிவ் நகரில், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் என்ன முடிவெடுக்கப்போகின்றன என்பது கேள்வியாக இருக்கிறது.

Israelis Demand Opposition Arab Alliance

இஸ்ரேல் நாடாளுமன்றத்தை பொறுத்தவரை, மொத்தம் 120 இடங்கள் இருக்கின்றன. 61 இடங்களில் ஜெயித்தால் ஆட்சியமைக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகளின்படி நெதன்யாகு கூட்டணிக்கு 53, எதிர்க்கட்சிகளுக்கு 48, அரபு கட்சிகளுக்கு 19 இடங்கள் கிடைத்திருக்கின்றன. இதை வைத்து பார்க்கும்போது, நெதன்யாகு, எதிர்க்கட்சியுடன் கூட்டணி வைக்கணும். இல்லையெனில், அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்கணும். ஆனால், நெதன்யாகுவை பொறுத்தவரை.. நான்தான் ராஜா, நானே மந்திரி என்கிற மைண்ட் செட் கொண்டவர். எனவே நிச்சயம் அரபு கட்சியோடு போக மாட்டார்.

மட்டுமல்லாது எதிர்க்கட்சியை சரமாரியாக விமர்சித்திருந்தார். இப்படி இருக்கையில், அவரால் எதிர்க்கட்சிகளுடனும் கூட்டணி வைக்க முடியாது. அவருக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன், மீண்டும் தேர்தலை நடத்துவது. அப்படியில்லையெனில், எதிர்க்கட்சிலிருந்து எம்பிக்களை தள்ளிக்கொண்டு வருவது.

ஆனால், இதெல்லாம் நடப்பதற்கு முன்னதாக.. எதிர்க்கட்சிகள், அரபு கட்சிகளுடன் கூட்டணி வைத்து நெதன்யாகுவை பதவியிலிருந்து காலி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். “உண்மையான மாற்றத்திற்கான கடைசி வாய்ப்பு இது” என்று கூறி அக்.31 அன்று இரவு ஹபிமா சதுக்கத்தில், ஆயிரக்கணக்கான யூத மற்றும் அரபு மக்கள் இணைந்து போராட்டத்தை நடத்தியுள்ளனர். அரபு கட்சிகளுடன், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.

இதை எதிர்பார்க்காத நெதன்யாகு ஆதரவாளர்கள், “பயங்கரவாதிகளுடன் இணைந்து இஸ்ரேலில் ஆட்சி அமைக்க கூடாது” என்று எதிர் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். மேலும், அரபு கட்சிகள் கத்தாரிடமிருந்து நிதி பெற்று தேர்தலை திருடிவிட்டதாக நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார். வலதுசாரி அமைப்புகள் இந்த அரபு மக்களின் வாக்குப்பதிவை தேர்தல் பயங்கரவாதம் என்று விமர்சித்துள்ளன.

இஸ்ரேல் தேர்தலை பொறுத்தவரை, நெதன்யாகுவுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்! அவர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒருவேளை பதவி இல்லையெனில்.. வழக்கு விசாரணை சூடுபிடிக்கும். இது நெதன்யாகுவுக்கு பெரிய சிக்கல். எனவே, அடுத்த சில நாட்கள் இஸ்ரேல் நடக்கும் மாற்றங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற உள்ளன.

English summary

Israelis Demand Opposition Arab Alliance: In the recent parliamentary elections in Israel, no single party secured a majority. Against this backdrop, people in Israel have taken to the streets, demanding that opposition parties form an alliance with Arab parties in order to remove Netanyahu from power.

Read More

Previous Post

குழந்தையொன்று தாக்கப்பட்ட காணொளி: பெண் ஒருவர் கைது

Next Post

சன்டே கூட லீவ் விடாமல் தாக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய இழப்பு Kstovo.. புடினின் ஆக்ஷன் என்ன? | Deep-Strike Shock: Ukraine Drone Strikes Russia’s 4th Largest Lukoil Kstovo Refinery — AVT-6 Unit Ablaze 800km from Border

Next Post
சன்டே கூட லீவ் விடாமல் தாக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய இழப்பு Kstovo.. புடினின் ஆக்ஷன் என்ன? | Deep-Strike Shock: Ukraine Drone Strikes Russia’s 4th Largest Lukoil Kstovo Refinery — AVT-6 Unit Ablaze 800km from Border

சன்டே கூட லீவ் விடாமல் தாக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய இழப்பு Kstovo.. புடினின் ஆக்ஷன் என்ன? | Deep-Strike Shock: Ukraine Drone Strikes Russia's 4th Largest Lukoil Kstovo Refinery — AVT-6 Unit Ablaze 800km from Border

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin