• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நீலகிரியில் அறுவடைக்குத் தயாரான சிவப்பு முட்டைக்கோஸ்… போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
நீலகிரியில் அறுவடைக்குத் தயாரான சிவப்பு முட்டைக்கோஸ்… போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 11, 2026 1:32 PM IST

நீலகிரி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள சிவப்பு மற்றும் பச்சை முட்டைகோஸ்களுக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் வெட்டாமல் காத்திருக்கின்றனர்.

+

நீலகிரியில்

நீலகிரியில் அறுவடைக்குத் தயாரான சிவப்பு முட்டைக்கோஸ்… போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

நீலகிரி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள சிவப்பு மற்றும் பச்சை முட்டைகோஸ்களுக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் வெட்டாமல் காத்திருக்கின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் முட்டைகோஸ் அழுகும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் ஊட்டி அவலாஞ்சி சாலையில் பல்வேறு இடங்களில் முட்டைகோஸ் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்படும் நாற்றுகள் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள இந்த முட்டைகோஸ்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. எனினும், சந்தையில் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகள் முட்டைகோஸை அறுவடை செய்யாமல் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பச்சை முட்டைகோஸ் நாற்று ஒரு ரூபாய்க்கும், இளஞ்சிவப்பு முட்டைகோஸ் நாற்று இரண்டு ரூபாய்க்கும் வாங்கப்பட்டு நடவு செய்யப்படுகிறது. எரு, மருந்து மற்றும் பணியாட்கள் கூலி ஆகியவற்றால் விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து மழை பொழிவதால் அறுவடைக்கு தயாராக உள்ள முட்டைகோஸ் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து முட்டைகோஸ் விவசாயி தேவராஜ் தெரிவிக்கையில், மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் முன்பு 25 ரூபாய்க்கு விற்பனையான முட்டைகோஸ் தற்போது 7 அல்லது 8 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்றார். மேலும், முன்பு 50 ரூபாய்க்கு விற்பனையான சிகப்பு முட்டைகோஸ் தற்போது 20 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை ஆவதாகவும் அவர் கூறினார்.

விலை உயரும் என்ற நம்பிக்கையில் தாங்கள் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறைந்தபட்சம் 25 ரூபாய்க்கு மேல் விலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும், நல்ல விலை கிடைத்தால் மட்டுமே அடுத்த போகம் விவசாயத்திற்கு முதலீடு செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

பல்கேரியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

Next Post

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Next Post
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin