35
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், ஆஜராகாத சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக, மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கைதான அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர், இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் .
இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்கு விசாரணைகள் (30) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற து.எனினும், அவர் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
இவரது பிணையாளர்களில்,ஒருவர் மாத்திரமே நீதி மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், வைத்தியர் அர்ச்சுனா மற்றும் ஆஜராகாத பிணையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலையாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் (27) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)