நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதற்கமைய, உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி குறித்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு சவால் விடுத்து மேல் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள், மேலதிக நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஆகியன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டம்
குறித்த மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் சட்டப்பூர்வமானது எனவும் அறிவித்துள்ளது.

அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் தங்கள் சம்பளத்தின் மீது வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என்றும், அந்த ஊதியத்திலிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரியை அறவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

