நீடித்த மற்றும் நீண்டகாலப் போரை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆயுத உற்பத்தித் திறன் ஈரானின் அமைப்பிடம் உள்ளது என ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரெசா தலாய்-நிக் (Reza Talaei-Nik) தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டின் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே உபரி ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
போர்க்காலத்தில் ஈரானின் ஆயுத மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி, போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட 2.5 மடங்கு (250%) அதிகரித்துள்ளதாக தலாய்-நிக் அறிவித்துள்ளார்.
எதிரிகளின் வான்வழித் தாக்குதல்களால் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பான மாற்று உற்பத்தி மையங்கள் தயார் செய்யப்பட்டிருந்ததால் உற்பத்திப் பணிகள் ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

