நீங்க ஹோம் மேக்கரா? வீட்டிலிருந்தே மாதம் ரூ.15,000 சம்பாதிக்கலாம்! அதுவும் பெரிய இன்வெஸ்ட்மென்ட் இல்லாமல்!
இன்றைய சூழலில் பெரும்பாலான இல்லத்தரசிகள்.. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவராக நீங்கள் இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு தான். குடும்பத்தை பார்த்துக்கொண்டு எந்தவித முதலீடும் இல்லாமல் மாதம் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் சம்பாதிப்பதற்கு ஒரு சூப்பரான வழி இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.
விலைவாசி உயர்வு ஒன்றும் சொல்லும் படி இல்லை. கணவன் மனைவி என இருவரும் வேலை செய்தாலும் வருகின்ற வருமானம் என்னவோ குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கு இடையில் கேஸ் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என அடித்தட்டு மக்களை பணவீக்கம் வாட்டி வதைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இல்லத்தரசிகளுக்கு தாமும் ஒரு தொழிலை செய்து வீட்டிற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே வந்து விடுகிறது. ஆனால் அதற்கும் முதலீடு செய்ய முடியாமல் சிலர் தவித்து வருகின்றனர். எனவே குறைந்த முதலீட்டில் ஒரு டிபன் சர்வீஸ் பிசினஸை தொடங்கலாம்.
டிபன் சர்வீஸ்: இந்த தொழிலுக்கு பெரு நகரங்களில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. வெளியூரில் தங்கி வேலை செய்யும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், விடுதிகளில் தங்கி படிப்பவர்கள் என பலருக்கும் வீட்டு சாப்பாட்டின் மீது எப்போதும் ஏக்கம் இருக்கும்.

ஏனெனில் நீண்ட நாட்களாக தங்கள் ஊரில் இருந்து குடும்பத்தின் கையால் சாப்பிட்டிருப்பார்கள். இந்நிலையில் வெளியூர் வந்தவுடன் ஹோட்டல் உணவை தவிர வேறு வழியில்லாமல் இருப்பார்கள். எனவே இதையே உங்கள் பிசினஸ்-ஆக மாற்றலாம். நீங்கள் சுவையான அதே சமயம் சுத்தமான வீட்டு முறை சாப்பாட்டை வழங்க தொடங்கிவிட்டால் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஏனெனில் இது போன்ற தொழிலுக்கு நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது. அதுவும் கிளவுட் கிட்ச்சன் என்ற பெயரில் வீட்டிலிருந்து சமைத்து ஆன்லைன் தளங்களில் சிலர் டெலிவரி செய்து வருகின்றனர். இதில் நல்ல லாபமும் கிடைப்பதாக இந்த தொழிலில் சாதித்துக் காட்டியவர்கள் கூறியுள்ளனர்.
எவ்வளவு முதலீடு தேவை?: ஆரம்பத்தில் டிபன் சர்வீஸ் செய்ய பெரிய கடையோ அல்லது அலுவலகமோ தேவையில்லை. உங்கள் வீட்டில் இருந்தே தொழிலைத் தொடங்கலாம். ஆரம்ப முதலீடாக ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை மளிகை சாமான்கள், உணவை பேக் செய்வதற்கான பேக்கேஜிங் மெட்டீரியல்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு செலவாகும். இவ்வளவுதான் மொத்த செலவே. இதில் எடுத்தவுடன் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. நீங்கள் செய்யும் பிசினஸுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சிறுக சிறுக முதலீடு செய்யலாம். வீட்டில் இருக்கும் மளிகை சாமான்கள் மற்றும் பொருட்களை மட்டுமே வைத்து தொழில் தொடங்கலாம்.
இன்றெல்லாம் பல ஊர்களில் பாக்ஸ்களில் உணவுப் பொருட்களை வைத்து ஹாஸ்டல்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு டெலிவரி செய்கின்றனர். இதற்கு மாதா மாதம் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் அந்தந்த டிபன் சர்வீஸ் உரிமையாளர்கள் வருமானமும் பெறுகின்றனர். உங்கள் ஊரிலும் ஹாஸ்டல் மாணவர்கள் அதிகமாக இருந்து.. சத்தான அதே சமயம் சுத்தமான உணவை தேடிக் கொண்டிருந்தால்.. நீங்களும் இதே முறையை பின்பற்றலாம்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: நீங்கள் தினமும் 15 முதல் 20 டிபன் பாக்ஸ்களை டெலிவரி செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஒரு டிபனுக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கலாம். இதனால் மாதத்திற்கு ரூ.15,000 அல்லது அதற்கு மேல் கூட சம்பாதிக்கலாம். இது ஒரு சுய தொழில் என்பதால் எடுத்தவுடன் வருமானத்தை கணித்து விட முடியாது. இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டும்தான். உங்களுக்கு இருக்கும் வாடிக்கையாளர்களை பொறுத்தே வருமானம் அமையும். குறைந்த முதலீட்டில் சிலர் தொழிலை தேடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு. இப்படியும் ஒரு வழி இருக்கிறது. இதன் மூலமாகவும் நீங்கள் சம்பாதிக்கலாம்.
ஏனென்றால் பிசினஸ் என்று வரும்போது அதில் உடனே வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை யாராலும் சொல்ல முடியாது. இன்று சாதித்துக் காட்டியவர்கள் பலர் ஒரு காலத்தில் கண்டிப்பாக பிரச்சினையை எதிர்கொண்டு இருப்பார்கள். எனவே வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் வரை உங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
மற்றொரு விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஏரியாவிற்கும் ஒரு ஒரு தேவை இருக்கும். அதை நீங்கள் சரியாக கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் டிபன் சர்வீஸ் என்பது எப்போதும் டிமாண்ட் இருக்கும் பிசினஸ் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் உங்கள் ஏரியாவில் ஹாஸ்டல்கள் அதிகமாக இருக்கிறதா? உண்மையிலேயே டிபன் சர்வீஸ் தொடங்கினால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்களா? என்ற விபரங்களை எல்லாம் மதிப்பீடு செய்யுங்கள். இதுவும் உங்கள் பிசினஸ் வெற்றியடைய உதவும்.
எந்தத் தொழிலாக இருந்தாலும் ஆரம்பத்தில் கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் விடாமுயற்சி இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வாடிக்கையாளர்களை அதிகரிக்கலாம். வாட்ஸ் அப் குரூப், இன்ஸ்டாகிராம், அருகில் உள்ள ஹாஸ்டல்கள், அலுவலக ஏரியாக்கள், ஆன்லைன் டெலிவரி தலங்கள் போன்றவற்றின் மூலம் நீங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இந்த தொழிலின் மற்றொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா? இதை நீங்கள் உங்கள் குடும்ப பொறுப்புகளுடன் சேர்த்தே செய்ய முடியும். கடை அல்லது அலுவலக இடமோ அவசியம் இல்லை. உங்கள் வீட்டின் சமயலைறையே போதுமானது.
இந்தப் பதிவு வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து எந்த முதலீட்டு முடிவுகளும் எடுக்க வேண்டாம். உங்களுக்கு தொழில் தொடங்க விருப்பம் இருந்தால் சுய விருப்பத்தின் பேரில் தொடங்குங்கள்!
