Last Updated:
நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம், நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நார்வே செஸ் தொடரில் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம், நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த மகத்தான சாதனைக்காக பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இது பிரக்ஞானந்தா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதை எடுத்துரைக்கும் ஒரு அற்புதமான மைல்கல் என்றும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நார்வே செஸ் தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறை வீழ்த்தியதுடன், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தா புதிய சாதனைகளைப் படைத்திட வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.


