15 மீட்பு நாய்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. நோயாளிகள் சுமார் 10 நிமிடம் முகக்கவசம் அணிந்து சுவாசிக்கின்றனர். அந்த முகக் கவசம் நாய்களிடம் கொடுக்கப்படும்.
ஆய்வகத்தில், நாய்களுக்கு உணர்கருவிகள் பொருத்தப்பட்டு, தலைக்கவசம், உடை அணிவிக்கப்படுகிறது.
நோயாளிகளின் முகக் கவசம் நாய்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
மாறுபட்ட வாசனையை முகர்ந்தால் உடல் அசைவுகள் மூலம் நாய்கள் ஆய்வாளர்களுக்குத் தெரிவிக்கின்றன.
பெங்களூரைச் சேர்ந்த டோக்நோசிஸ் (Dognosis) நிறுவனம் நாய்களின் மூளைச் செயல்பாடு, சுவாசம், உடல் அசைவுகள் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆய்வு செய்கிறது. அதன்வழி நோயாளிக்குப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்பதை கண்டறிகிறது.
1,500க்கும் அதிகமானோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.
ஏழு முக்கிய புற்றுநோய்களை நாய்களால் மோப்பம்பிடித்துக் கண்டறிய முடிந்ததாக ஆய்வில் தெரியவந்தது. அதன் துல்லியம்? 90 விழுக்காட்டுக்கும் அதிகம்.
ஆய்வு இன்னும் தொடக்கநிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எளிதாகவும், குறைந்த செலவிலும் புற்றுநோய் பரிசோதனைகளை நடத்த அது வழிவகுக்கும் என்று டோக்நோசிஸ் நிறுவனம் சொன்னது.
நாய்கள் தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே வேலை செய்வதாக நிறுவனம் கூறுகிறது.

