நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான தற்போதைய வான்வழித் தாக்குதல்களால் ஹோர்முஸ் நீரிணையில்கப்பல் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இலங்கையில் அண்மையில் வழங்கப்பட்ட எரிபொருள் விலைக் குறைப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா என்ற பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
எரிபொருள் விலை
இதனால் மீண்டும் விலை உயர்வதற்கான அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகின்றது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) கடந்த ஜூன் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையைக் குறைத்தது.
இதனடிப்படையில் பெட்ரோல் (92 அக்டேன்), ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டு 414 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேசச் சந்தை
அட்டோ டீசல், ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டு 382 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் தற்போதைய அமெரிக்க-ஈரான் மோதலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் மீண்டும் எரிபொருள் அதிகரிப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச நெருக்கடி
இதன் தொடர்ச்சியாக வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய கடந்த ஆறாம் திகதி முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
இதையடுத்து 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 34 ரூபாவாக பேருந்து கட்டணங்களானது 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது.

அதற்கு இணையாக சொகுசு பேருந்து கட்டணங்களும் அதிவேக வீதிகளுக்கான பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போதைய சர்வதேச நெருக்கடி மீண்டும் கட்டண உயர்வுகளுக்கு வழிவகுக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

