• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாடளாவிய ரீதியில் 2,345 இடைநிலைப் பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய வசதி – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாடளாவிய ரீதியில் 2,345 இடைநிலைப் பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய வசதி – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
நாடளாவிய ரீதியில் 2,345 இடைநிலைப் பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய வசதி

நாடளாவிய ரீதியில் 2,345 இடைநிலைப் பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஆரம்பப் பாடசாலைகளுக்கும் இவ்வசதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


நாடளாவிய ரீதியிலுள்ள 2,345 அரச இடைநிலைப் பாடசாலைகளுக்குப் புதிதாக அதிவேக ஃபைபர் இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் அனைத்து 3,832 ஆரம்பப் பாடசாலைகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் “கிராமத்துக்குத் தொடர்பாடல்” செயற்றிட்டத்தின் கீழ், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்து இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

நாடு முழுவதிலுமுள்ள 6,225 இடைநிலைப் பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 1,264 பாடசாலைகள் ஏற்கெனவே ஃபைபர் இணைப்புகளைக் கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் மேலும் 2,345 பாடசாலைகளுக்குப் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2,616 இடைநிலைப் பாடசாலைகளுக்கு ஃபைபர் இணைய இணைப்புகளை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை புதிதாக ஃபைபர் இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ள 2,345 பாடசாலைகளில் கிழக்கு மாகாணத்தில் 347 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 334 பாடசாலைகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 303 பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

மேலும், தென் மாகாணத்தில் 300 பாடசாலைகளுக்கும், மேல் மாகாணத்தில் 285 பாடசாலைகளுக்கும், மத்திய மாகாணத்தில் 275 பாடசாலைகளுக்கும், ஊவா மாகாணத்தில் 176 பாடசாலைகளுக்கும், வட மாகாணத்தில் 172 பாடசாலைகளுக்கும், வடமத்திய மாகாணத்தில் 153 பாடசாலைகளுக்கும் இந்த இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஒரு பாடசாலைக்கு மாதாந்தம் 5,130 ரூபாய் செலவில் வரம்பற்ற இணைய வசதிகளை வழங்குவதற்காக 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக 150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் இறுதி இலக்கின் கீழ், அடுத்த கட்டமாக 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து 3,832 ஆரம்பப் பாடசாலைகளுக்கும் இந்த அதிவேக இணைய வசதி விரிவுபடுத்தப்படவுள்ளது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளுக்கான சமமான அணுகலை உறுதிப்படுத்துவதுடன், டிஜிட்டல் கல்வி முறைமை மற்றும் தற்போதைய கல்வி மறுசீரமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Read More

Previous Post

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. வெஸ்ட் இண்டீஸ் வீரர் காயம், அதிரடி பேட்ஸ்மேன் அணியில் சேர்ப்பு | கிரிக்கெட் செய்திகள்

Next Post

சர்வதேசக் கண்காணிப்பு இல்லை எனில் பேரழிவு நிச்சயம்.. AI வளர்ச்சி குறித்து ஜப்பானிய கோடீஸ்வரர் எச்சரிக்கை.. | World News (உலக செய்திகள்)

Next Post
சர்வதேசக் கண்காணிப்பு இல்லை எனில் பேரழிவு நிச்சயம்.. AI வளர்ச்சி குறித்து ஜப்பானிய கோடீஸ்வரர் எச்சரிக்கை.. | World News (உலக செய்திகள்)

சர்வதேசக் கண்காணிப்பு இல்லை எனில் பேரழிவு நிச்சயம்.. AI வளர்ச்சி குறித்து ஜப்பானிய கோடீஸ்வரர் எச்சரிக்கை.. | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin