
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று (02) ஆரம்பமாகியுள்ளது.
ஜனவரி 24ம் திகதி வரை மூன்றாம் தவணை நடத்தப்படவுள்ளதுடன், நாளை (03) முதல் இறுதி தவணை பரீட்சைகளை நடத்தப்படவுள்ளன.
அத்துடன், 2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2024 ஆண்டு மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதியுன் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்டது.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

