• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாசிக் TCS நிறுவனத்தில் மதமாற்ற முயற்சி.. போராட்டம் வெடிக்கும் சூழலால் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நாசிக் TCS நிறுவனத்தில் மதமாற்ற முயற்சி.. போராட்டம் வெடிக்கும் சூழலால் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 16, 2026 5:38 PM IST

இது சம்பந்தமாக அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள்
நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் நடைபெற்று வந்த மதமாற்ற விவகாரம் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் புகார்கள் தற்போது வன்முறையாக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து பணியாளர்கள் வீட்டில் இருந்தவாறு பணியாற்றுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிறுவனமானது சுமார் 5 ஆயிரம் சது அடி பரப்பளவில் 170 பணியாளர்களுக்கு 2 ஷிப்ட்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு , சில ஊழியர்களும் உயர் அதிகாரிகள் சிலரும் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தப்பட்டதாகவும் புகார்கள் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கடந்த மார்ச் மாதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் தனது சக ஆண் ஊழியர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் பாலியல் ரீதியில் துன்பம் அளித்ததகாவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் 2022 முதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நடந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், மதம் மாற வேண்டும் என்று ஊழியர்கள் சிலரை, சக ஊழியர்களை வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் இன்று பூதாகரமாக வெடித்த நிலையில், சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அடித்து நொறுக்க ஏராளமானோர் திரண்டதால் பதற்றமான சூழல் காணப்பட்டது.

இதையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆசிப் அன்சாரி, ஷபி ஷேக் , ஷாரூக் குரேஷி, ராசா மேனன், தபுசிப் அத்தர், டேனிஷ் ஷேக், அஷ்வினி சைனானி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், டிசிஎஸ் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எத்தகைய செயலையும் மன்னிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அலுவலக அளவில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அலட்சியமாக இருந்த உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இதுபோன்ற சுரண்டல்களுக்கு ஆளானால் உடனடியாகத் தொடர்புகொள்ள மாநில அளவிலான பிரத்யேக ‘ஹெல்ப்லைன்’ எண்ணை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

நாசிக் TCS நிறுவனத்தில் மதமாற்ற முயற்சி.. போராட்டம் வெடிக்கும் சூழலால் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்

Read More

Previous Post

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் கைது

Next Post

DECODE | US Iran Tensions | 2-ம் கட்ட பேச்சு வார்த்தையில் முக்கியத்துவம் பெறப்போவது இதுதான்… ஈரான் நலன்கள் பாதிக்கப்படலாம்? | World News (உலக செய்திகள்)

Next Post
DECODE | US Iran Tensions | 2-ம் கட்ட பேச்சு வார்த்தையில் முக்கியத்துவம் பெறப்போவது இதுதான்… ஈரான் நலன்கள் பாதிக்கப்படலாம்? | World News (உலக செய்திகள்)

DECODE | US Iran Tensions | 2-ம் கட்ட பேச்சு வார்த்தையில் முக்கியத்துவம் பெறப்போவது இதுதான்... ஈரான் நலன்கள் பாதிக்கப்படலாம்? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin