இதில், பல்வேறு ஓட்டப் பிரிவுகள் இருக்கும் நிலையில், பரிசு கிடைக்கும் வகையிலான ஓட்டப்பந்தயங்களும் இருக்கின்றன, பரிசு இல்லாத ஆனால் பலன்கள் இருக்கின்ற வகையிலான ஓட்டப்பந்தயங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன, எந்தெந்த பிரிவில் பங்கேற்றால் பரிசு கிடைக்கும் / பரிசு கிடைக்காது, எந்த வயதை சேர்ந்தவர்கள் எந்த பிரிவில் பங்கேற்கலாம் என்று இங்கே சொல்கிறோம். அவற்றை தெரிந்துக் கொண்டு, உங்களுக்கான பிரிவு எது என முடிவுசெய்து, இப்போதே போட்டிக்கு தயாராகுங்கள்.
நம்ம ரன் கோயம்புத்தூர் 2026 நிகழ்ச்சியில் பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும் முதியவர்கள் பங்கேற்க…
- 3 கி.மீ. நடைப்பயணம் (3 KM Walkathon),
- 2,000 அடிகள் விருப்பமான ஆடையில் ரன்னிங் செல்வது (2K Freestyle Costume run),
- 5 மற்றும் 10 கி.மீ ஜாலியான ஓட்டம் (Fun Runs)
ஆகிய பிரிவுகள் இருக்கின்றன. இதிலேயே, போட்டி பிரிவில்…
- பெரியவர்களுக்கு 5 மற்றும் 10 கி.மீ. நேரப்படுத்தப்பட்ட ஓட்டங்கள் (5 & 10 KM Timed Runs)
- குழந்தைகள் 1 & 2 கி.மீ ஜாலியான ஓட்டம் (1 & 2 KM Fun Run) இருக்கின்றன.
இப்படியாக அனைத்து வயதினரும் தங்களது வயது மற்றும் உடற்தகுதிக்கு ஏற்ற வகையில் பங்கேற்க பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் போட்டிப் பிரிவுகளுக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ. 3 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 1 கி.மீ., 2 கி.மீ. மற்றும் 3 கி.மீ. பிரிவுகளில் பங்கேற்பவர்களுக்கு ரொக்கப் பரிசு கிடையாது. பரிசு இல்லையென்றாலும், நம்ம ரன் கோயம்புத்தூர் 2026-ல் பதிவு செய்து ஓடுவதால் சில நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும். அவற்றில் குறிப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்கப் பதிவு செய்பவர்களுக்கு பிராண்டட் டி-ஷர்ட், நிறைவுப் பதக்கம், பந்தய எண் அட்டை, மின்னணுச் சான்றிதழ், பரிசுகள் மற்றும் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், ஓட்ட நிகழ்ச்சியின்போது தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட் பானங்கள், புத்துணர்வு பானங்கள் ஆகியவை வழங்கப்படும். இவையன்றி நிகழ்விடத்தில் ஸும்பா நடனப் பயிற்சி, உடற்பயிற்சி விழா, விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், லைவ் மியூசிக் இருக்குமென்பதால், அவற்றையும் நீங்கள் இலவசமாக பெறலாம். இவற்றுடன், தொழில்முறை புகைப்படக்கலைஞர்களும் நிகழ்ச்சியில் இருப்பார்கள். அவர்களிடம் நீங்கள் புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம்.

