நச்சுன்னு நாலு.. விஜய் முன்னிலையில் நடந்த மெகா ஒப்பந்தம்..!!
சென்னை தேனாம்பேட்டை கைடன்ஸ் தமிழ்நாடு அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் முன்னிலையில் 4 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
2036ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கும் தவெக அரசுக்கு இன்று கையெழுத்தான 4 ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவையாக விளங்குகிறது.

கைடென்ஸ் அலுவலகத்தில் இன்று காலையில் தொழிற்துறை அமைச்சகத்தால் ஏற்பாட்டு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்துக்கொண்ட முதல்வர் விஜய் தலைமையில் உலக நாடுகளை சேர்ந்த Nordex, Chubb, Motivelink மற்றும் Western Australia பல்கலைகழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
சுவிஸ் நாட்டை சேர்ந்த Chubb நிறுவனம் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டு உலகிலேயே மிகப்பெரிய இன்சூரன்ஸ் மற்றும் சொத்து நிர்வாக நிறுவனமாகும். இந்நிறுவனம் சென்னையில் தனது தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஜிசிசி அலுவலகத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம் Chubb நிறுவனத்தில் சுமார் 220 உயர் நிலை டெக் வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த உலகளாவிய எனர்ஜி மற்ரும் காற்றாலை நிறுவனமான Nordex சென்னையில் தனது டெக் கட்டமைப்பு மற்றும் சேவையை மேம்படுத்துவதற்காக தனி ஜிசிசி அலுவலகத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம் சுமார் 1000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தாக தென் கொரியா நாட்டை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான MotiveLink பிள்ளைபாக்கம் சிப்காட் பகுதியில் சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க உள்ளது, MotiveLink நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிகவும் முக்கிய உதிரிபாக சப்ளையராக உள்ளது.
இதை தொடர்ந்து கடைசியாக இந்தியாவில் முதல் கேம்பஸை சென்னையில் அமைக்க Western Australia பல்கலைகழகத்துடன் கைடென்ஸ் தமிழ்நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. சுமார் 50000 சதுரடியில் வேளச்சேரியில் ஓன் நேஷ்னல் பார்கில் அமைக்க உள்ளது, இதன் மூலம் சுமார் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இன்றைய கூட்டத்தில் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா முன்னிலையில் கைடென்ஸ் அலுவலகத்தில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்பில் முதல்வர் விஜய் பேசும்போது, அறிவிக்கப்பட்ட முதலீடுகளை முறையாக நடைமுறைப்படுத்த அனைத்து விதிமான உதவிகளையும் தமிழ்நாடு அரசு உதவும் என. இதன் மூலம் வேகமாகவும் உங்களுடைய ஆப்ரேஷன்ஸை துவங்கலாம் என தெரிவித்தார்.
இதைவிட முக்கியமாக விஜய் இன்று கைடென்ஸ் அலுவலகத்தில் வெற்றி தமிழகம் என்னும் 2036க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எட்டும் பாதை அறிக்கையில் கையெழுத்திட்டார்.
Presence of Chief Minister Joseph Vijay at the Guidance Tamil Nadu office,MoUs signed with various companies to provide employment opportunities for 1,500 people. pic.twitter.com/Ur93KYsAPl
— Vignesh Theni (@Vignesh_twitz) July 30, 2026 “>

