நேற்றைய போட்டிக்கு பின் சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வந்தபோது ரெய்னா தோனியைச் சந்தித்தார். அப்போது தோனியிடம் நடந்த உரையாடல் குறித்து பேசியிருக்கும் ரெய்னா அதில், “நான் தோனியிடம், ‘நீங்கள் ஐபிஎல் 2026 சீசனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டீர்கள். அது கணக்கில் வராது. நீங்கள் அடுத்த ஆண்டு திரும்பி வந்தே ஆக வேண்டும்’ என்று சொன்னேன். அதற்கு தோனி, ‘இல்லை நண்பா, என் உடல் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது’ என்றார்.


