வாசன் ஓடிடிபிளேயில் உள்ள பெல்ஸ் அண்ட் பேண்டர் ஷோவின் சமீபத்திய எபிசோடில் தோனியின் கேப்டன்ஷிப்பைப் பாதுகாத்தார். அவர், ‘ஒரு கேப்டன் எவ்வளவு நல்லவரா இருப்பாருன்னா, அவருக்கு எவ்வளவு நல்ல அணி கிடைக்குதோ அவ்வளவுதான். நான் கிளைவ் லாய்டுக்கு ஜிம்பாப்வே அணியை கொடுத்தா, அவராலும் சரியா செய்ய முடியாது. தோனிக்கு என்ன மாதிரியான அணி கிடைச்சிருக்குன்னு பார்த்துட்டு அவரோட கேப்டன்ஷிப்பை மதிப்பிடணும். அவருக்கு நல்ல அணி இருந்தப்போ, அவர் என்ன செஞ்சாருன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். என் கருத்துப்படி, கேப்டன்ஷிப் பல சமயங்களில் ஓவர்ரேட்டட் ஆகிடுது.’ என்று கூறினார்.

