Last Updated:
தோசை.. இட்லி.. சாம்பார் என்ற பாடலை பயன்படுத்தி தங்கள் அணியை கேலி செய்ததாக ஆர்சிபி அணி மீது சிஎஸ்கே அணி சார்பில் பிசிசிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தோசை.. இட்லி.. சாம்பார் என்ற பாடலை பயன்படுத்தி தங்கள் அணியை கேலி செய்ததாக ஆர்சிபி அணி மீது சிஎஸ்கே அணி சார்பில் பிசிசிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையே போட்டி நடந்தது.
அந்த போட்டியில் பெங்களூரு அணியின் டிஜே தோசை.. இட்லி. சாம்பார் சட்னி.. சட்னி என்ற பாடலை அவ்வப்போது ஒலிக்க விட்டார். இது தமிழ்நாட்டின் அடையாளங்களையும், தங்கள் அணியையும் கேலி செய்யும் விதமாக அமைந்ததாக கூறி சென்னை அணி சார்பில் பிசிசிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை அணியின் ஆதரவாளர்களுக்கு சிலர் அங்கு தொந்தரவு கொடுத்ததாக சென்னை அணி புகார் தெரிவித்துள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடும் அணிக்கு ஆதரவாக அமைக்கப்படும் டிஜே, பெங்களூரு மைதானத்தில் எதிர் அணியை கேலி செய்யும் வேலையை செய்ததாகவும், இதுகுறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


