• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே: லக்னோ அணியுடன் இன்று பலப்பரீட்சை | CSK looking to end losing streak to play Lucknow today ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே: லக்னோ அணியுடன் இன்று பலப்பரீட்சை | CSK looking to end losing streak to play Lucknow today ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ: ஐபிஎல் கிரிக்​கெட்​டின் லீக் ஆட்​டத்​தில் இன்று சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே), லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் (எல்​எஸ்​ஜி) அணி​கள் மோதவுள்​ளன.

லக்னோ மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டி​யில் வெற்றி பெற்று தொடர் தோல்வி​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் நோக்​கத்​தில் சிஎஸ்கே அணி களமிறங்​க​வுள்​ளது.

சிஎஸ்கே அணி இந்த சீசனில் இது​வரை 6 போட்​டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, 5 தோல்வி​களைச் சந்​தித்து மோச​மான நிலை​யில் உள்​ளது. ஐபிஎல் தொடர்​களி​லேயே தொடர்ச்​சி​யாக சிஎஸ்கே அணி 5 தோல்வி​களைச் சந்​தித்​ததே இல்​லை.

கடைசி​யாக சென்​னை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யிடம் படு​தோல்​வியைக் கண்​டது. வெறும் 103 ரன்​களி​லேயே சிஎஸ்கே அணி ஆட்​ட​மிழந்​தது. மிக மோச​மான பேட்​டிங்​கால் அந்த அணி தோல்வி கண்​டது ரசிகர்​களிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யது.

இந்த ஆட்​டத்​தில் தொடக்க வீரர்​கள் ரச்​சின் ரவீந்​தி​ரா, டேவன் கான்​வே, ராகுல் திரி​பா​தி, அஸ்​வின், ரவீந்​திர ஜடேஜா, தீபக் ஹூடா ஆகியோர் மிக​வும் மோச​மாக விளை​யாடி ஆட்​ட​மிழந்​தனர். விஜய் சங்​கரும், ஷிவம் துபே​வும் ஓரளவுக்கு நிலைத்து விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தனர்.

தொடக்க வீரர் ரச்​சின் ரவீந்​தி​ரா, டேவன் கான்​வே, ராகுல் திரி​பா​தி, ஷிவம் துபே ஆகியோரிடருந்து அதிரடி​யான இன்​னிங்ஸ் இன்று வெளிப்பட்டால்​தான் அந்த அணி வெற்​றிப்​பாதைக்​குத் திரும்ப முடி​யும். அதே​போல் நடு​வரிசை​யில் கேப்​டன் தோனி, அஸ்​வின், ரவீந்​திர ஜடேஜா, தீபக் ஹூடா ஆகியோரிட​மிருந்து சிறப்​பான இன்​னிங்ஸ் வெளிப்​பட்​டால் மட்​டுமே அது அணி​யின் உத்​வேகத்தை மேம்​படுத்​தும்.

அதே​போல் பவுலிங்​கிலும் சிஎஸ்கே அணி மோச​மான நிலை​யில் உள்​ளது. சிஎஸ்கே வீரர்​கள் கலீல் அகமது, அன்​ஷுல் காம்​போஜ், ரவிச்​சந்​திரன் அஸ்​வின், ரவீந்​திர ஜடேஜா ஆகியோரிட​மிருந்து சிறப்​பான பந்​து​வீச்சு வெளிப்​பட்​டால் அந்த அணிக்கு வெற்றி எளி​தாகும்.

சென்னை அணிக்கு இன்​னும் 8 ஆட்​டங்​கள் மட்​டுமே எஞ்​சி​யுள்​ளன. இந்த 8 ஆட்​டங்​களில் குறைந்​தது 7-ல் சிஎஸ்கே அணி வெற்றி பெற்​றால் மட்​டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்​பில் நுழைய முடி​யும். எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி வெற்​றிக்​காக கடுமை​யாகப் போராடும் என்று எதிர்​பார்க்​கலாம்.

சிஎஸ்கே அணி​யில் நூர் அகமது மட்​டுமே இது​வரை சிறப்​பாக பந்​து​வீசி வரு​கிறார். அவர் இது​வரை 12 விக்​கெட்​களைச் சாய்த்​துள்​ளார். எனவே, லக்​னோவுக்கு எதி​ரான இந்த ஆட்​டத்​தி​லும் நூர் அகமது சிறப்​பாக பந்​து​வீசு​வார் என்று எதிர்​பார்க்​கலாம்.

அதே​நேரத்​தில் கடந்த 3 ஆட்​டங்​களில் தொடர்ச்​சி​யாக வெற்றி பெற்ற உற்​சாகத்​தில் லக்னோ அணி களமிறங்​கு​கிறது. அந்த அணி இது​வரை 6 போட்​டிகளில் விளை​யாடி 4-ல் வெற்​றி, 2-ல் தோல்​வியைப் பெற்​றுள்​ளது. கடந்த ஆட்​டத்​தில் லக்னோ அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பலம் ​வாய்ந்த குஜ​ராத் அணியை அதன் சொந்த மைதானத்​திலேயே வீழ்த்​தி​யுள்​ளது.

தொடக்க வீரர் எய்​டன் மார்​கிரம், 3-வ​தாக களமிறங்​கும் நிகோலஸ் பூரன் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி வரு​கின்​றனர். எனவே, அவர்​களிட​மிருந்து இன்​றைய ஆட்​டத்​தி​லும் அற்​புத​மான இன்​னிங்ஸ் வெளிப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதே​போல கேப்​டன் ரிஷப் பந்த்​தும் இன்​றைய ஆட்​டத்​தில் அவரது அதிரடியை வெளிப்​படுத்​து​வார் என்று ரசிகர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர். பின்​வரிசை​யில் வரும் ஆயுஷ் பதோனி, டேவிட் மில்​லர், அப்​துல் சமத், ஹிம்​மத் சிங் ஆகியோ​ரும் பலம் சேர்க்​கின்​றனர்.

பவுலிங்​கில் ஷர்​துல் தாக்​குர், ஆகாஷ் தீப், அவேஷ் கான் ஆகியோர் சிறப்​பாக பந்​து​வீசி சிஎஸ்கே அணி​யினருக்கு நெருக்​கடி தரு​வர் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், சுழற்​பந்​து​வீச்​சில் திக்​வேஷ் ராத்​தி, ரவி பிஷ்னோய் ஆகியோரிட​மிருந்து மேம்​பட்ட பந்​து​வீச்​சு இன்​றைய ஆட்​டத்​தில்​ வெளிப்​படும்​ என்​று தெரிகிறது.



Read More

Previous Post

பிகார் தேர்தல்: காங். – ஆர்ஜேடி கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்? தேஜஸ்வி யாதவ் சூசகம்!

Next Post

அமெரிக்க விமான விபத்​தில் இந்​தியர் உட்பட 6 பேர் உயிரிழப்பு | Six people, including Indians, dies in US plane crash

Next Post
அமெரிக்க விமான விபத்​தில் இந்​தியர் உட்பட 6 பேர் உயிரிழப்பு | Six people, including Indians, dies in US plane crash

அமெரிக்க விமான விபத்​தில் இந்​தியர் உட்பட 6 பேர் உயிரிழப்பு | Six people, including Indians, dies in US plane crash

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin