தொடருந்து ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே தொடருந்து மார்க்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாகப் பிரதான தொடருந்து பாதையின் போக்குவரத்திற்குப் பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாகப் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
பாரிய தடைகள்
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்ட இந்த தொடருந்து தொடருந்தானது, தெற்கு களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு தொடருந்து என தெரிவிக்கப்படுகிறது.

