Last Updated:
சுற்றி நின்றவர்கள் வீடியோவாக செல்போன்களில் படம்பிடித்தனர்.
பாம்பு போல வளைந்து நெளிந்து பள்ளியின் கேட்டுக்குள் பெண் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் இண்டர்மீடியட் எனப்படும் இடைநிலைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நவாடா பகுதியில் நடந்த தேர்வில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகு சிலர் தேர்வு மையங்களுக்கு சென்றனர். சிலரோ காவல்துறை உடல்தகுதி தேர்வுக்கு வருவது போல சுற்றுச்சுவரை தாவிக் குதித்து தேர்வு மையத்துக்குள் சென்றனர். இதனை சுற்றி நின்றவர்கள் வீடியோவாக செல்போன்களில் படம்பிடித்தனர்.
இந்நிலையில், தேர்வு மையத்திற்கு வந்த ஒரு இளம்பெண் மிகவும் சாமர்த்தியமாக, பள்ளியின் கேட்டுக்கும், தரைக்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் நெளிந்தபடி தேர்வு மையத்துக்குள் புகுந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் தேர்வர்கள் இருவர் மற்றும் 6 தேர்வு மைய அதிகாரிகள் என 8 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
February 03, 2025 2:20 PM IST
தேர்வு மையத்திற்கு செல்ல வித்தியாச முயற்சி… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு – அதிர்ச்சி சம்பவம்!


