தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் பேரணி நாளை ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு பதுளை சேனநாயக்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.
‘மக்கள் ஆட்சி – இரண்டு ஆண்டுகள் வலுவுடன்; அனைவருக்கும் முன்னேற்றம்’ என்ற தொனிப்பொருளில், தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படும் பேரணித் தொடரின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (a)

