• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய ரயில்வேயின் புதிய ரூல்ஸ்.. வெறும் 45 பைசாவில் சர்ப்ரைஸ்..! | Indian Railways New Rule From October 27: Counter Ticket Passengers to Get Travel Insurance

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்திய ரயில்வேயின் புதிய ரூல்ஸ்.. வெறும் 45 பைசாவில் சர்ப்ரைஸ்..! | Indian Railways New Rule From October 27: Counter Ticket Passengers to Get Travel Insurance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய ரயில்வேயின் புதிய ரூல்ஸ்.. வெறும் 45 பைசாவில் சர்ப்ரைஸ்..!

போக்குவரத்து முறைகளிலேயே மிகவும் மலிவான மற்றும் வசதியான போக்குவரத்து முறை என்றால் அது ரயில் பயணம் தான். இதற்காகவே லட்சக்கணக்கானோர் தினசரி அடிப்படையில் ரயில் மூலம் பயணம் செய்கின்றனர். மக்களின் வசதிக்காக இந்திய ரயில்வே எண்ணற்ற வசதிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் ரயில் டிக்கெட் பெறும் பயணிகளுக்கு மட்டுமே கிடைத்த பயணக் காப்பீட்டு வசதி இனி நேரடியாக டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் பெறும் பயணிகளுக்கும் கிடைக்க இருக்கிறது.

2026-ஆம் ஆண்டின் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் ரயில்வே டிக்கெட் கவுண்டரில் வழங்கப்படும் அனைத்து டிக்கெட்டுக்கும் பயணக் காப்பீடு வசதி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்று செய்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும் பயணக் காப்பீடு வசதியை அமல்படுத்துவதற்கும் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் புதிய ரூல்ஸ்.. வெறும் 45 பைசாவில் சர்ப்ரைஸ்..!

அக்டோபர் 27 முதல் புதிய விதிமுறை: தற்போது வரை ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டுமே டிக்கெட் வாங்கும் போது பயணக் காப்பீட்டை பெற முடியும். ஆனால் தற்போதைய உத்தரவின் பேரில் இனி இந்த வசதி கவுண்டரில் நேரடியாக பயணிகள் டிக்கெட் வாங்கினாலும் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

2024-ஆம் ஆண்டின் பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட் பெறும் பயணிகள் ஒவ்வொருவரும் காப்பீடு பெறுவதற்கு ரூ.0.45 கூடுதலாக செலுத்த வேண்டும். இதில் வரியும் அடங்கும்.

தற்போது வழங்கப்படும் காப்பீட்டின் கீழ் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.10 லட்சம், பார்ஷியல் டிசெபிலிட்டி என்று சொல்லப்படுகிற ஒரு சில பாகங்களில் மட்டும் ஊனம் ஏற்பட்டால் ரூ.7.5 லட்சம், காயம் ஏற்பட்டால் அதற்கான மருத்துவமனை செலவுகளுக்கு ரூ.2 லட்சம், உடலை எடுத்துச் செல்வதற்கான செலவுக்கு ரூ.10,000 வழங்கப்படுகிறது. இவை தற்போது ஆன்லைன் டிக்கெட் மூலம் பெறப்படும் காப்பீட்டுக்கான நன்மைகள் ஆகும். டிக்கெட் கவுண்டரில் வழங்கப்படும் டிக்கெட்டுக்கு எந்தெந்த விதிகள் பொருந்தும் என்பதை ரயில்வே நிர்வாகம் இனிவரும் நாட்களில் கூற வாய்ப்புள்ளது.

ஆன்லைன் மூலம் யாரெல்லாம் காப்பீடு பெறலாம்?: தற்போதைய விதிகளின்படி கன்ஃபார்ம்டு டிக்கெட், ஆர்ஏசி அல்லது பார்ஷியல் கன்ஃபார்ம்டு டிக்கெட் வைத்துள்ள இந்தியப் பயணிகள் ரயில்வே வழங்கும் காப்பீட்டை தேர்வு செய்ய முடியும். அதுவே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சீட் அல்லது பர்த் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் ஆகியோருக்கு இந்த காப்பீடு பொருந்தாது. 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சில நிபந்தனைகளின் கீழ் காப்பீடு வழங்கப்படுகிறது.

ஆன்லைன் மூலம் காப்பீடு பெறும் பயணிகளுக்கான பாலிசி விபரங்களை காப்பீட்டு நிறுவனம் எஸ்எம்எஸ் அல்லது மெயில் மூலமாக அந்தந்த பயணிகளுக்கு அனுப்பி விடும். மேலும் ஐஆர்சிடிசி புக்கிங் ஹிஸ்டரி பகுதியிலும் பாலிசி நம்பரை பயணிகள் எளிதில் பார்க்கலாம்.

பயணிகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்: இதுவரையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே கிடைத்து வந்த காப்பீடு இனி எல்லாப் பயணிகளுக்கும் கிடைக்கும். அக்டோபர் 27 முதல் வரப்போகும் இந்த புதிய விதியை அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் தெரிந்து கொண்டு காப்பீடு பெறலாம். பிரீமியம் தொகை எவ்வளவு? காப்பீடு பெற தேவையான ஆவணங்கள் என்னென்ன? என்பது குறித்த விவரங்களும் விரைவில் வெளியாகும்.

Share This Article

Story first published: Friday, October 16, 2026, 19:05 [IST]

Other articles published on Oct 16, 2026

Read More

Previous Post

தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பேரணியில் ஜனாதிபதி பங்கேற்பு

Next Post

குழந்தைக்கு மருத்துவ உதவி: உறுதி அளித்த முதல் அமைச்சர் விஜய்… | Makkal Osai

Next Post
குழந்தைக்கு மருத்துவ உதவி: உறுதி அளித்த முதல் அமைச்சர் விஜய்… | Makkal Osai

குழந்தைக்கு மருத்துவ உதவி: உறுதி அளித்த முதல் அமைச்சர் விஜய்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin